பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/900

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

882

பன்னிரு திருமுறை வரலாறு


'இருள்தரு துன்பப்படல மறைப்ப.........

அருள் தருகைகொடுத்தோற்றும் ஐயாறன் அடித்தலமே

'நின் மலன் என்றங்கு ஏத்தும் நினேப்பினே யருளி நாளும்

நம்மலம் அறுப்பர் போலும் நனிபள்ளியடிகளாரே??

3 g

'இருளறுத்து நின்(று), ஈசன் என்பார்க்கெல்லாம் அருள் கொடுத்திடும் ஆனேக்கா அண்ண லே’’ எனவரும் திருநாவுக்கரசர் வாய்மொழியாலும்,

'தலம் நிலவிய மனிதர்களொடு தவமுயல்தரு

முனிவர்கள்தம

மலம் அறுவகை மனம் நினேதரு மறைவன மமர்தரு

பர மனே’’

'மலஞய தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே’’

என வரும் ஞானசம்பந்தப் பிள்ளே யார் வாய்மொழி யாலும் நன்குணரலாம்.

இவ்வாறு பசு வேதனே' எனவும் இருள்? எனவும் 'மலம்’ எனவும் பெயர் கூறப்பட்டு உயிரோடு ஒற்றித்து நின்று உயிர்களின் விழைவு, அறிவு, செயல்களே மறைப்பதாகிய ஆணவ மலத்துக்கும், அதனின்றும் வே று ப ட் டு ஆன்மாக்களின் விழைவு, அறிவு, செயல்களே விளக்குதலால் ஒண்தளே’ எனப் பெயர் பெற்ற மாயைக்கும் வேற்றுமை பெரிதாதலே மேலெடுத் துக் காட்டிய தேவாரப் பாடல்களால் நன்குணரலாம்.