பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/903

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரப் பதிகங்களிற் குறிக்கப்பெற்ற திருத்தலங்கள் 885

மருத நிலத்தில் வேந்தனுகிய இந்திரன் வழிபாடும், பெருமனலுலகமாகிய நெய்தல் நிலத்தில் வருணன் வழிபாடும் சிறப்புற நிகழ்ந்தன. இச்செய்தி,

"மாயோன் மேய காடுறை யுலகமும்

சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லே குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”

எனவரும் தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரத் தால் நன்கு புலனும். பாட்டுந் தொகையுமாகிய சங்கச் செய்யுட்களேயும் சிலப்பதிகாரம், மணிமேகலையாகிய காப்பியங்களே யு ம் நோக்குங்கால், தமிழ் மூவேந்தர் களின் தலைநகர்களாகிய காவிரிப்பூம்பட்டினம், உறை யூர், மதுரை, வஞ்சி, காஞ்சி முதலிய தமிழ்நாட்டுப் பேரூர்களிலும் சிற்றுார்களிலும், -

'காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறுங் குளணும் வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்துடைநிலையும்’ (திருமுருகாற்) 'ஆலமுங் கடம்பும் நல்யாற்று நடுவும்

கால்வழக் கறுநிலேக் குன்றமும்’ (பரிபாடல்)

ஆகிய பிற இடங்களிலும் தெய்வத்தை வழிபடுதற் கென்றே சிறியவும் பெரியவுமாகிய பல்வேறு வழிபாட் டிடங்களேத் தமிழ் மக்கள் அமைத்திருந்தனர் என்ப தும், இங்ங்னம் முற்காலத்தில் மக்கள் பலரும் ஒருங்கு கூடித் தெய்வத்தை வழிபட்டுப் போற்றுதற்கு நிலைக் கள ய்ை விளங்கிய சிறப்புடைய இடங்களே பிறவா யாக்கைப் பெரியோன் ஆகிய சிவபெருமான் கோயி லாகவும் ஆறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயி லாகவும் நீலமேனி நெடியோன் ஆகிய திருமால்