பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/904

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

886

பன்னிரு திருமுறை வரலாறு


கோயிலாகவும் வெற்றி வேற்றடக்கைக் கொற்றவை? யாகிய துர்க்கை, காடுகிழாள் முதலிய தெய்வங்களின் கோயில்களாவும் வள்ர்ச்சியுற்றன என்பதும் இனிது புலகுைம்.

சங்க காலந் தொட்டுத் தமிழகத்திற் சிறப்புற்று விளங்குந் திருக்கோயில்கள் பலவற்றுள்ளும் பிறவா யாக்கைப் பெரியோகிைய சிவபெருமானுக்குரிய திருக் கோயில்களே தலைமையும் பன்மையும் பெற்றுத் திகழ்ந்து வருதலே அனைவரும் நன்குணர்வர். தென் றமிழ் நாட்டில் வழங்கும் தெய்வ வழிபா டுகள் பலவற் றுள்ளும் சிவ வழிபாடே முதன்மை பெற்று விளங்கும் தொன்மையும் சிறப்பும் வாய்ந்ததென்பது,

"நீரும் நிலனுந் தீயும் வளியும்

மாக விசும்போ டைந்துட னியற்றிய மழுவாள் நெடியோன் தலைவகை மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சுடர் வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு மாற்றரு மரபின் உயர் பலிகொடுமார் அந்தி விழவில் துரியம் கறங்க”

(மதுரைக்காஞ்சி-453-60) என மாங்குடி மருதருைம்,

'ஆடக மாடத் தறிதுயிலமர்த்தோன்

சேடங் கொண்டு சிலர் நின்றேத்தத் தெண்ணிர்க் கரந்த செஞ்சடைக்கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் ஆங்கது வாங்கி யணிமணிப் புயத்துத் தாங்கினன்’’ (சிலப்பதிகாரம்) என இளங்கோவடிகளும்,

'நுதல் விழி நாட்டத் திறையோன் முதலாப்

பதிவாழ் சதுக்கத்துத் தெய்வ மீருக? (மணிமேகலை) எனச் சாத்தனரும் சிவபெருமான் தெய்வங்களுக்கெல் லாம் முதல்வகை வைத்துப் போற்றப்பெறும் முறை