பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/906

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

888

பன்னிரு திருமுறை வரலாறு


சிவபெருமானது அருவுருவத்திருமேனியை வழிபடுதற் குரிய பெரிய திருக்கோயில்களாகத் திகழ்வன் வாயின். பட்டினப்பாலேயிற் கந்து எனக் குறிக்கப்படும் தெய் வம் உறையும் தறியும், சைவர்களால் வழிபடப்பெறும் அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கத் திருவுருவ மும் யாவரும் ஒன்றெனக் கருதி வழிபடுதற்குரிய பொதுமைச் சிறப்பாலும் திருவுருவ அமைப்பாலும் ஒன்றே யென் பது,

'காதன்மையாற் ருெழுமடியார் நெஞ்சினுள்ளே

கன்ருப்பூர் நடுதறியைக் காணலா மே' |6-61-I j

என வரும் அப்பர் அருள்மொழியால் உய்த்துணரப் படும். நன்னன் என்னும் குறுநில மன்னனுக்குரிய ‘நவிரம் என்ற மலேயில், கறைமிடற் றண்ணலாகிய சிவபெருமானுக்குரிய திருக்கோயில் சிறந்து விளங்கிய தென்பதனே,

'நீரகம் பணிக்கும் அஞ்சுவரு கடுந்திறற்

பேரிசை நவிரம் மேஎ யுறையும் காரியுண்டிக் கடவுளதியற்கையும்’ (மலேபடுகடாம்)

எனவரும் பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகனர் வாய் மொழியால் நன்குணரலாம். பாண்டியன் பல்யாகசாலே முதுகுடுமிப் பெருவழுதியை நோக்கி,

'பணியியரத்தை நின்குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ்செயற்கே, இறைஞ்சுக பெருமநின் சென்னிசிறந்த நான்மறை முனிவர் ஏந்து கையெதிரே' (புறம்-5)

எனக் காரிகிழார் என்னும் புலவர் வாழ்த்துதலால், அவர் காலத்துத் தமிழ் வேந்தர்கள் சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கோயிலே வலம்வந்து பணி தலேத் தமது அரச வாழ்க்கையில்ை அடைதற்குரிய நற்பேருகக் கொண்டிருந்தமை இனிது விளங்கும்.