பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/907

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரப் பதிகங்களிற் குறிக்கப்பெற்ற திருத்தலங்கள் 889

கடைச் சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட முடி மன்னர்களுள் கோச்செங்களுன் என்னும் வேந்தர் பெருமான், சிவபெருமானிடத்துப் பேரன்பு உடைய ராய் அம்முதல்வனே அடியார் பலரும் குழுமிப் போற் றுதற்கு ஏற்றமுறையில் மலேபோன்றுயர்ந்த ம் டக் கோயில்கள் பலவற்றைச் சோழ நாட்டிற் பல ஊர் களிலும் அமைத்துச் செயற்கரிய செய்த சிவனடியார் களுள் ஒருவராகத் திருத்தொண்டத்தொகையிற் போற்றப்பெற்றுள்ளார். சோழநாட்டில் அம்பர், நன்னி லம், வைகல் முதலிய திருத்தலங்களிற் காணப்படும் மாடக்கோயில்கள் கோச்செங்கட் சோழராற் கட்டப் பெற்ற திருக்கோயில்களேயாகும். இச்செய்தி, இத் தலங்களைப் போற்றித் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களிலும் சுந்தரர் அருளிய திருப்பதிகத்தி லும் குறிக்கப் பெற்றிருத்தல் காணலாம். கோச் செங்கட் சோழநாயனுர் சிவபெருமானுக்கென எழுபது மாடக்கோயில்களே அமைத்துள்ளார். இச்செய்தியை,

"இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோளிசற்கு

எழில்மாடம் எழுபதுசெய் துலகமாண்ட திருக்குலத்துவளச் சோழன் சேர்ந்தகோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே”

(பெரிய திருமொழி - 6-6-8)

எனத் திரு நறையூர்ப் பதிகத்தில் திருமங்கையாழ்வார் தெளிவாகக் குறித்துள்ளார். கோச்செங்கட் சோழர் அமைத்த மாடக்கோயில்கள் முன்னுள்ள திருக் கோயில்களேக் காட்டிலும் அளவிற் பெரியனவாக அமைந்தமையால் அவை பெருங்கோயில்’ என வழங்கப்பெற்றன. நன்னிலத்திற் கொச்செங்கட் சோழ ராற் கட்டப்பெற்ற மாடக்கோயிலே 'நன்னிலத்துப் பெருங்கோயில் (7-98-1-11) என நம்பியாரூரர் குறித்துப் போற்றுதலால், மாடக்கோயிலேப் பெருங் கோயில் எனவும் வழங்கும் வழக்கமுண்மை நன்கு புலம்ை.