பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/910

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

892

பன்னிரு திருமுறை வரலாறு


இதுகாறும் எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் தேவார ஆசிரியர்களாற் பாடிப் போற்றப்பெற்றுள்ள திருத்தலங்களிற் பல, அவ்வாசிரியர்கள் நிலவிய காலத்திற்குப் பன்னுாறாண்டுகள் முற்பட்டு நிலைத்த பழமையுடையன என்பதும், பழையாறை வடதளி முதலிய சில கோயில்கள் புறச்சமயத்தாரால் மறைக்கப்பட்டு மீண்டும் சிவன் கோயில்களாக மாற்றப் பெற்றுள்ளன என்பதும் நன்கு தெளியப்படும். இனி, தேவார ஆசிரியர் காலத்தில் சிராப்பள்ளி, மயேந்திரப் பள்ளி, குணதரவீச்சுரம் முதலியனபோன்று புதியனவாக அமைக்கப்பெற்ற கோயில்களும் சிலவுள. இவ்வாறு தம் காலத்தில் தோன்றிய புதிய கோயில்கள் சிலவற்றையும் தேவார ஆசிரியர்கள் திருப்பதிகங்கனாற் பரவிப் போற்றியுள்ளார்கள்

இனி, தேவார ஆசிரியர் காலத்துத் திருக்கோயில் அமைப்பினை நோக்குங்கால் அக்கோயில்களிற் பெருங்கோயிலாகிய மாடக்கோயில்களும், குதிரை பூட்டிய தேர் பேரன்று சக்கரங்களுடன் அமைந்த சக்கரக் கோயிலும், ஞாழல் (புலி நகக் கொன்றை) கொகுடி (முல்லை) முதலியனவாக அவ்வத்தலத்திலுள்ள மரம் கொடி முதலிய தாவரத்தின் சார்பினால் அமைந்த கோயில்களும், நல்ல மணி முதலியவற்றால் அழகுறப் புனைந்த மணிக் கோயில்களும். *தூய செம்பொன்னினால் எழுதி மேய்ந்த தில்லைச் சிற்றம்பலம், திருவாலங்காடு முதலாகக் கூத்தப்பெருமான் ஆடல் புரியும் அம்பலங்களும், வானத்திலிருந்து இறங்கும் விமானத்தின் அமைப்பினை ஒத்து அமைந்த வீழிமிழலை விண்ணிழி. விமானம் போன்ற திருக்கோயில்களும் உள்ளமை புலனாகும்.

  • திருவாரூர்த் திருக்கோயிலை "மணிக்கோயில்" (பெரிய-திருநாவுக்கரசர் புராணம் 223) எனவும், 'பூங்கோயில்’ (பெரிய-திருநகரச். 49) எனவும் சேக்கிழாசடிகள் குறித்துள்ளமை இங்குக் கருதத்தக்கதாகும்.