பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/915

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரப் பதிகங்களிற் குறிக்கப்பெற்ற திருத்தலங்கள் 897

இடைக்காலத்தில் சமணர்கள் தங்கிய தவப்பள்ளி களாக இருந்து, பின் சிவத்தலங்களாக மாறிய இடங்கள் பள்ளி’ எனவும் பாழி’ எனவும் வழங்கப்படு கின்றன. இறைவனுடைய வீரச் செயல்கள் வெளிப் படுதற்கு நிலைக்களமாயமைந்த திருக்கோயில்கள் வீரட் டானம் என வழங்கப்பட்டன. வீரஸ்தானம் என்ற வடமொழித் தொடர் தமிழில் வீரட்டானம் எனத் திரிந்தது என்ப. ஆளுடைய பிள்ளையார் அட்டானம் என் ருேதிய நாலிரண்டும் (2-39-3) என்ற தொடரால் இறைவனுடைய வீரச் செயல்கள் வெளிப்பட்ட திருத் தலங்களாகிய அட்ட வீரட்டங்களேயும் குறித்துள்ளார்.

சிவபெருமான், பிரமனது தருக்கினே யடக்க வேண்டி அவன் கொண்ட ஐந்து தலேயில் ஒன்றைக் கிள்ளிய இடம் திருக்கண்டியூர். அந்தகாசு ரனேக் கொன்ற தலம் திருக்கோவலூர். திரிபுரத்தை எரித் தழித்த தலம் திருவதிகை. தக்கனது தலையைத் தடிந்த தலம் திருப்பறியலூர். சலந்தராசுரனைத் தம் காற் பெருவிரலாற் கீறியமைத்த சக்கரத்தினுல் தலேயரிந்த தலம் திருவிற்குடி. கயமுகாசுரனுகிய யானேயினைக் கொன்று அதன் தோலேயுரித்துப் போர்த் துக்கொண்ட தலம் வழுவூர். மன்மதனே எரித்த தலம் திருக்குறுக்கை. மார்க்கண்டேயர்க்காகக் கூற்றுவனேக் யுதைத்த தலம் திருக்கடவூர். இங்கே குறித்த எட்டுத் தலங்களும் எல்லாம்வல்ல சிவபெருமானுடைய வீரச் செயல்கள் வெளிப்பட்டுத் தோன்றுவதற்கு நிலைக்கள மாய் விளங்குதலால் அட்ட வீரட்டம்' எனப் போற்றப் பெறுவன வாயின. இவற்றில் விற்குடி நீங்க லாக ஏனைய ஏழு வீரட்டானங்களுடன் கோத்திட்டைக் G tණු- வீரட்டம் (6-71-2) என மற்றெரு வீரட்டானத் தையும் இனத்து அட்ட வீரட்டம் எனக் குறிப்பிடும் வழக்கமும் உண்டெனத் தெரிகிறது.