பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/916

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

898

பன்னிரு திருமுறை வரலாறு


கோவிரியின் கரைக் கண்டி வீரட்டானம்,

கடவூர் வீரட்டானம், காமருசீர் அதிகை

மேவிய வீரட்டானம், வழுவை வீரட்டம்

வியன்பறியல் வீரட்டம், விடையூர்திக் கிடமாம்

கோவல்நகர் வீரட்டம், குறுக்கை விரட்டம்,

கோத்திட்டைக்குடி வீரட்டானம் இவை கூறி

நாவில் நவின்றுரைப்பார்க்கு நனுகச்சென்ருல்

தமன் தமிரும் சிவன் தமரென் நகல்வர் நன்கே’’

[6–71-2J

எனவரும் திருத்தாண்டகத்தாலும், இங்கே குறித்த வீரட்டான த்தின் வேருக, குடி, என்ற பெயருடைய தலங்களைக் குறிக்கும் அடுத்த பாடலில் (6-71-3) 'விற்குடி”யைக் குறிப்பிடுதலாலும், விற்குடியில் நிகழ்ந் ததாகக் கூறப்படும் சலந்தராசுரனை யழித்த வீரச் செயல் கோத்திடைக் குடியில் நிகழ்ந்ததாகக்கொண்டு கூறும் மற்ருெரு புராணமுறையும் அப்பரடிகள் காலத் தில் வழங்கியதாகக் கருத இடமுண்டு. இனி, அப்ப ர டி க ள் காலத்தவராகிய ஆளுடையபிள்ளையார் விற்குடி ன்ற தலத்தையே வீரட்டம்’(2-108-1-11) னக் குறித்திருத்தலால், விற்குடி வீரட்டமும் கோத் திட்டைக்குடி வீரட்டமும் ஒருதலமே யெனக்கொள்ளு தற்கும் இடமுண்டு.

ஊர்ப்பெயர்களுடன் நகர், நன் னகர் என்ற சொற் களே இறுதியில் இணைத்து வேட்கள நன்னகர்’, பாம் புர நன்னகர்’ எனத் தேவார ஆசிரியர்கள் தம்பதி கங்களிற் சிறப்பித்துப் போற்றியுள்ளார்கள். ஒரூரில் வாழும் சிறப்புடையார் ஒருவர் பெயரால் அவ்வூர் அழைக்கப்பெறுதலும் உண்டு. இச்செய்தி, நிறை யினர் நீல நக்கன் நெடுமா நகர் என்று தொண்டர் அறையுமூர் சாத்தமங்கை’ என வரும் ஞானசம்பந்தர் தேவாரத்தால் நன்கு புலம்ை.