பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/917

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரப் பதிகங்களிற் குறிக்கப்பெற்ற திருத்தலங்கள் 899

'குடியிருப்பு என்ற பொருளில் இல் என்னும் ஈற்றல் வழங்கும் தலங்களும் உள. அன்பில், பிரம்பில் கீழையில், செந்தில், கள்ளில் என்பன இவ்வகையைச் சேர்ந்தன. அகம்” என்ற ஈற்ருல் ஏடகம்’ என வழங் கும் ஊர்ப்பெயரும் இங்கு நோக்கத்தக்கதாகும், குடிகள் பலரும் சேர்ந்து வாழும் சிற்றுார் சேரி என வழங்கப்பட்டது. திருத்தெளிச் சேரி, இறையான் சேரி, என வ ரு த ல் க | ண் க. ஊர்களின் தொன் மை நோக்கிப் பழையாறை, பழையனூர் என வும், புதியனவாக அமைக்கப்பெற்றமை கருதித் திருப்புத்துனர், அரிசிற்கரைப் புத்துார், கடுவாய்க்கரைப் புத்துார் எனவும் வழங்கப்பெற்றன. பேரூர்களின் அருகே அமைந்துள்ள தலங்கள் அவையமைந்துள்ள திசைபற்றிக் குடவாயில் குணவாயில் என வழங்கப் பெற்றன.

ஒரே தலத்திற் பல திருக்கோயில்கள் அமைந் திருந்தால் அவை யமைந்துள்ள திசையைச் சுட்டி இன்ன திசையிலுள்ள இன்ன கோயில் என அத் திருக் கோயிலேத் தேவார ஆசிரியர்கள் குறித்துப் போற்றி யுள்ளார்கள். பழையாறை வடதளி. ஆறை மேற்றளி எனவும், காஞ்சி மேற்றளி, கச்சித் திருவேகம்பம், ஒனகாந்தன் தளி, கச்சி மயானம், கச்சிநெறிக் காரைக்காடு, கச்சி அனேக தங்காவதம் எனவும், கடவூர் வீரட்டம், கடவூர் மயானம் எனவும், திருவா ரூர்த் திருமூலட்டானம், திருவாரூர் அரநெறி, திருவா ரூர்ப் பரவையுண் மண்டளி எனவும் இவ்வாறு ஒரூரிலே யுள்ள பல திருக்கோயில்களேயும் அவற்றின் திசையும் சிறப்புப் பெயர்களும் ஆகிய அடையாளங்களைக் கொண்டு தெரிவிக்கும் முறையினே த் தேவாரத் திருப் பதிகங்களிற் காணலாம்.

ஒரு நாட்டில் ஒரே பெயருடைய பல தலங்கள் இருப்பின் அத்தலங்கள் அமைந்துள்ள திசை பற்றியும்