பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/919

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவ்ாரப் பதிகங்களிற் குறிக் கப்பெற்ற திருத்தலங்கள் 90!

எனவும் காடு எனவும் பொழில்’ எனவும் குறிக்கப்பெற். றன. ஆற்றுடன் தொடர்புடைய தலங்களும், இறை வன யடைதற்குரிய அழகிய நெறி' எனப் போற்றப் பெறும் தலங்களும் ஆறு' என்னும் ஈற்ருற் குறிக்கப் பட்டன. சிறப்புடைய தீர்த்தத்துடன் இயைந்த தலங் கள் குளம் என்ற பெயராலும், ஊர்மக்கள் பலரும் கூடி இறைவனே வழிபடுதற்கேற்ற பொது இடங்களாய் விளங்கிய தலங்கள் 'களம்' என்ற பெயராலும் வழங்கப் பெற்றன.

ஆற்றையடுத்து அமைந்துள்ள தலங்கள் துறை’ யென்ற பெயரால் வழங்கப்பெற்றன. துறைகள் எனப்படும் இத்தலங்கள், அங்குச் சிறப்பாக வளர்ந் துள்ள மரம் முதலிய கருப்பொருள்களின் அமைப்பா லும் அவ்வந் நிலஅமைப்பாலும், பல்வேறு அடை மொழிகளால் வழங்கப்பெற்றன. திருப்பராய்த்துறை, திருப்பாலேத்துறை,கடம்பந்துறை, திருமாந்துறை, திரு ஆலந்துறை, குரங்காடுதுறை, மயிலாடுதுறை எனவும், திருவெண்டுறை எனவும் பேணுபெருந்துறை, திருச் சோற்றுத்துறை, திருப்பாற்றுறை எனவும் வரும் தலங் கள் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கன.

இனி, இறைவனது திருவருளில் உயிர்கள் திளைத்து இன்புறுதற்கு நிலக்களமாய் விளங்கும் திருக்கோயில் களேயும் நெறி' என்னும் பொருளில் துறை என்ற பெயரால் வழங்குதலும் உண்டு. திருவெண்ணெய் நல்லூர்த் திருக்கோயிலேத் திருவருட்டுறை எனவும், திருநெல்வாயில் திருக்கோயிலேத் திரு அரத்துறை" என வும் தேவார ஆசிரியர்கள் குறித்துள்ளமை காண லாம். இவ்வாறே திருச்சேறையிலுள்ள திருக்கோயி இலச் செந்நெறி' எனவும் தண்டலே என்னும் ஊரிலுள்ள கோயிலை நீள்நெறி' எனவும் திருவாரூரில் உள்ள