பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/920

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

902

பன்னிரு திருமுறை வரலாறு


கோயிலே அரனெறி' எனவும் அவ்வாசிரியர்கள் திருப் பதிகங்களிற் குறித்துள்ளமை இங்கு ஒப்புநோக்கத் தக்கதாகும்.

திருக்கோயில்களில் இறைவன் அருவுருவத்திரு மேனியாகிய சிவலிங்கத் திருமேனியுடன் எழுந்தருளி யிருக்கும் கருவறையினே மூலஸ்தானம்’ என்பர். வடசொற்ருெடராகிய இதனை மூலட்டானம்' என வழங்குதல் தமிழ்மரபு. எல்லாத்திருக்கோயில்களி லும் சிவலிங்கத் திருமேனியுடன் இறைவன் வீற்றிருந் தருளும் சிறப்புடைய அருள் நிலையத்தினை மூலட்டா னம் எனப் பொதுவாக வழங்குதல் உண்டு. எனினும் திருவாரூர்த் திருக்கோயிலுள் புற்றிடங்கொண்ட பெரு மான் எழுந்தருளிய இடத்தையே திருமூலட்டானம்’ எனத்திருநாவுக்கரசர் திருப்பதிகங்களிற் சிறப்பாகக் குறித்துள்ளார். இவ்வாறே தில்லைப்பெருங் கோயிலில் சிவலிங்கத்திருமேனி அமைந்த நிலையத்தைத் திரு மூலட்டானம் எனச் சிறப்பாக வழங்குதல் உண்டு.

'பெரும்பற்றப் புலியூர் மூலட்டானத்தார்’ {6–5 1–6]

என அப்பரடிகள் குறிப்பிடுதலால் திருவாரூரைப் போன்று தில்லையிலும் மூலட்ட னம் உள்ளமை தெளியப்படும்.

தேவாரப் பாடல்பெற்ற தலங்கள் சிலவற்றில் ஊர்ப்பெயரும் அவ்வூரில் அமைந்த கோயிற்பெயரும் வேறு வேறு குறிக்கப்பெற்றுள்ளன. அவற்றைப் பிற் சேர்க்கையாகக் குறித்த பாடல் பெற்றதலங்களின் திருப்பதிக அட்டவணையால் அறிந்துகொள்ளலாம்.