பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 75

  • பாசம் மற்றில ராயினும் பார்மிசை

ஆசை சங்கரற் காயின தன்மையால் தேசு மிக்க திருவுரு வானவர் ஈசனைத் தொழுதே தொழு தேகினர் எனவும் வரும் சேக்கிழாரடிகள் வாய்மொழிகளால் இனிது புலம்ை.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி யொருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து. (898) எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியவாறு முற் பிறப்பிற் கற்ற கல்வியும் கல்விப் பயணுகிய கடவுள் வழிபடும் உயிரைத் தொடர்ந்து சென்று பயன் தருதல் ஒரு தலையாகலின், ஆளுடைய பிள்ளையார் பண்டு திருவடி மறவாப் பான்மையாகிய நற்றவத்தின் பயனுக இளம் பருவத்திலேயே இறைவன் திருவரு ளாற் சிவஞானப் பாலுண்டு திருஞானசம்பந்தப் விள்ளேயாரெனப் போற்றப் பெற்றனரென் க.

மூவாண்டு நிரம்பாத குழந்தைப் பருவத்தின ராகப் பிள்ளையார் இருந்தமையாலும் தளர்நடைப் பருவத்தினராகிய அவர் வளர் பசி வருத்த “ அம்மே அப்பா என அழைத்து அழுதமையாலும் சிவபெரு மான் தாயும் தந்தையுமாகிய திருக்கோ லத்துடன் வந்தருளி அக்குழந்தைக்குப் பாலமுதம் ஊட்டும் வாயிலாகச் சிவஞானத்தை நல்கியருளினனென்க. ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலமுடைய சகலராகிய நம்மனேர்க்கு அருள் செய்யும் முறையில் இறைவன் ஆளுடைய பிள்ளேயார் முன் மானிட வடிவு கொண்டு தோன்றது. விடைமேல் உமையொருபாக ராக முன் னின்று அருள் புரிந்த தன் காரணம், பிள்ளே யார் நம்மைப்போன்று சகலராய்ப் பிறந்தும் பிரளயா கலர் க்குரிய உபதேசம் பெறும் பக்குவமுடைய ரா யிருந்தமையே யென அறிஞர் கூறுவர். பண்டை

1. பல்கலேப் புலவர் கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் எழுதிய 'திருஞானசம்பந்த சுவாமிகள் சரித்திரம் பக்கம் 3,8.