பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 81

சென்று திருக்கோயிலே வலம் வந்து இறைவன் திருமுன்னர் நின்று,

மடையில் வாஃா பாய மாதரசர் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையும் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட உருவ மென்கொலோ.

எனத் தொடங்கும் இன்னிசைத் திருப்பதிகத்தினேத் தம் மெல்லிய கைம்மலர்களால் தாளமிட்டுப் பாடினர். பிள்ளேயார் தம் கையதல்ை ஒத்தறுத்துப் பாடுதலேக் கண்ட திருக்கோ லாக்காவிறைவர், பிள்ளேயாருடைய கைகள் வருந்தும் என்று எண்ணித் திருவைந்தெழுத் தெழுதப்பெற்ற செம்பொன்னலாகிய திருத்தாளத் தினேப் பிள்ளேயார் கைத்தலத்திலே வந்து பொருந்தும் படி அளித்தருளினர். ஆளுடைய பிள்ளேயாரும் இறைவனருளால் தம் கையகத்து வந்து சேர்ந்த திருத்தாளத்தினத் தலைமேற் கொண்டு போற்றி மகிழ்ந்து ஏழிசையுந் தழைத்தோங்க அவ்வின்னிசைத் திருப்பதிகத்தினேத் தாளத்துடன் பாடிப் போற்றினர்.

இங்ங்னம் திருக்கோலக்காவில் எழுந்தருளிய சிவபெருமான், திருஞானசம்பந்தப் பிள்ளே யாருக்கு உலகவர் காணத் தாளம் ஈந்தருளி, அவர் பாடல் கேட்டுகந்து நாளும் இன்னிசையால் தமிழ் பரப்ப உதவிய இத்திருவருட் செயலே,

நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும்

ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் தாளம் ஈந்து அவன் பாடலுக் கிரங்குந்

தன்மையாளனே என்மனக் கருத்தை ஆளும் பூதங்கள் பாட கின்ருடும்

அங்கண ன்றனே எண்கண மிறைஞ்சுங் கோளிலிப் பெருங் கோயிலுளானேக்

கோலக்கா வினிற் கண்டு கொண்டேனே.