பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

பன்னிரு திருமுறை வரலாறு


செய்திகள் முறையே மணிவாசகர் பொருட்டு ஆலவாய்ப் பெருமான் நரியைப் பரியாக்கிய திருவிளையாடலையும் பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடலையும் குறிப்பன என்பர்.

நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவுசெய்வானும் விரதங்கொண்டாட வல்லானும் விச்சின்றி நாறுசெய்வானும் முரசதிர்ந் தானே முன் ளுேட முன் பணிந் தன்பர்களேத்த அரவரைச் சாத்தி நின்ருனும் ஆரூரமர்ந்த அம்மானே.” எனவரும் இத்திருப்பாட்டில் காட்டில் அலேந்து பிணங் களைத் தின்று திரியும் இழிதொழிலுடைய தாழ்ந்த நரியை யும் உயர்ந்தோர் மதிக்கும் பெருமை வாய்ந்த சிறந்த ஊர்தி யாகிய குதிரையாகத் திருத்திப் பணிகொள்ளவல்ல தன் வயத்தளுகத் திகழ்பவனும், துன்பமே நுகர்தற்குரிய நிலை யில் நிரயத்து வீழ்ந்த உயிர்த் தொகுதிகளை இன்பமே நுகர் தற்குரிய வானுறையுந் தெய்வங்களாக உயர்த்தி வாழ்விக் கும் பேரருளாளனும், இருவினைப் பாசத்தாற் கட்டுண்டு மயங்கும் மாந்தரைத் தவநெறியிற் புகுத்திச் சிவஞானத்தை யளித்தல் கருதி அவர் பொருட்டு எண்ணிலாத விரதநெறி களைத் தானே மேற்கொண்டு அருள்புரியவல்ல விரதியாக விளங்குபவனும், வித்தாகிய காரணத்தைக்கொண்டு விளை விப்பார் பிறராக, தான் எதனையும் வேண்டாமலே காரிய மாகிய பயிர்களை விளைவிக்கவல்ல முடிவிலாற்றலுடைய வனும் திருவாரூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யுள்ள சிவபெருமான் ஒருவனே யென்னும் உண்மையைத் திருநாவுக்கரசடிகளார் இனிது விளக்கியுள்ளார். நரியைக் குதிரை செய்தல், நரகரைத் தேவு செய்தல், விரதங் கொண் டாடுதல், விச்சின்றி நாறு செய்தல் என்பவற்றை முன் ளுெரு காலத்திற் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் களாகத் திருநாவுக்கரசர் கருதவில்லை யென்பதற்கு இச் செயல்களை இத்திருப்பாடலில் எதிர்காலத்தில் வைத்துக் கூறியருளியதே சிறந்த சான்ருகும். திருநாவுக்கரசர் காலத்திற்கு முன் இறைவன் செய்தருளிய திருவிளேயாடல் களைக் குறிப்பது நரியைக் குதிரை செய்வானும் எனத் தொடங்கும் திருப்பாடலன்றென்பதும் எண்குணத்தாளுகிய இறைவனுடைய தன் வயத்தளுதல், பேரருளுடைமை, முடி விலாற்றலுடைமை முதலிய அருட் பண்புகளை விளக்குவதே இத்திருப்பாடலென்பதும் இதன் பொருளை ஆழ்ந்துணர வல்லார்க்கு இனிது புலனும். இப்பாடலில் " விச்சின்றி