பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1001

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் $385

பாணர்க்குத் தக்கவாறு சிறப்புச் செய்தருளித் தாம் பாடி யருளுந் திருப்பதிகங்களை யாழிலிட்டு இசைத்துத் தம்மைப் பிரியாதுடனிருக்கும் பேற்றினை வழங்கியருளினர். அவ்வாறு ஆளுடைய பிள்ளையாருடன் சிவபெருமானுறையும் திருத் தலங்களை வணங்கி இன்னிசைத் திருத்தொண்டு புரிந்து வரும் திருநீலகண்ட யாழ்ப்பாணர், தமது மனைவியார் மதங்க சூளாமணியாருடன் திருநல்லூர்ப் பெருமணத்தில் ஆளுடைய பிள்ளையார் திருமணத்தைக் கண்டு அவருடனே கூட அடியார் திருக்கூட்டத்துடன் ஈறில்பெருஞ் சோதியி னுள்ளே புகுந்து ஈறிலாப் பேரின்ப வாழ்வு பெற்ருர்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் வாசித்த யாழ்க்கருவி பதினன்கு நரம்புகளையுடைய செம்முறைக் கேள்வி என் னும் சகோட யாழாகும். ஆசிரியர் சேக்கிழார் திருநீல கண்டப் பெரும்பாணரைச் சகோட யாழ்த் தலைவர் ' எனக் குறித்துள்ளார். திருவாலவாயிறைவர் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு அருளிய சிறப்பினை ஞானசம்பந்தப் பிள்ளையார் சமணரை வென்று தென்னவன் கூனிமிர்த் தருளியபின் ஆலவாய்ப் பெருமானைப் பரவிப் பாடிய திரு வியமகப் பதிகத்தில்,

  • தக்க பூமனைச் சுற்றக் கருளொடே

தார முய்த்தது பானர்க் கருளொடே ’ என்ற தொடரிற் போற்றிய செய்தி பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தர் புராணத்தில் விளக்கப்பெற்றது. திரு நீலகண்டப் பெரும்பானர் பத்திமையால் இசைபாட இறை வன் அவர்க்கு அருள் புரிந்த செய்தியை,

" பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்

கோண லீளம் பிறைச் சென்னிக் கோளிலியெம் பெருமானே" (1–62-9) என வரும் தொடரில் ஆளுடைய பிள்ளையார் குறித்துப் போற்றியுள்ளமை காணலாம்.

சடைய காயஞர்

திருநாவலுரரிலே ஆதி சைவ மரபிலே தோன்றியவர் சடையனர். இவர் இசை ஞானியாரை மணந்து உலக மெலாம் மெய்ஞ்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றுத் தந்த பெருமையையுடையவர்.