பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1002

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

986

பன்னிரு திருமுறை வரலாறு

இசை ஞானியார்

சடைய நாயனரது உரிமைத் திருமனைவியாராகிய இசை ஞானியம்மையார், சைவ முதல்வராகிய ஆளுடைய நம்பிகளைப் பெற்ற பெருமையுடையவர் திருவாரூர் இறை வர் திருவடிகளை மறவாத நெஞ்சமுடையவர்.

சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தாயாராகிய இசை ஞானி யார் கமலாபுரத்தில் (திருவாரூரில்) கெளதம கோத்திரத் தவரான ஞானசிவாசாரியார் என்பவருடைய மகள் என்று திருவாரூர்க் கல்வெட்டொன்றிற் குறிக்கப்பெற்றுளது.

திருத்தொண்டர் புராணத்திற் போற்றப்பெற்ற நாயன்மார்களின் காலம்

நாயன் என்பது தலைவன் என்ற பொருளில் வழங்கும் சொல். நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று என இச்சொல்லை இப்பொருளிற் சேக்கிழாரடிகள் வழங்கி யுள்ளார். நாயன் என்னும் சொல் உயர்த்தற்கண் விகுதியாகிய ஆர்விகுதியைப்பெற்று நாயனுர் என வழங்கியது. நாயஞர் என்னும் பெயர் எல்லாம் வல்ல சிவபெருமானைக் குறித்து வழங்கிய சிறப்பினதாகும்.

தேயநாதன் சிராப்பள்ளிமேவிய

நாயனரென நம் வினேதாசமே."

எனத் திருநாவுக்கரசர் சிராப்பள்ளியிறைவரை நாயனுள் என்ற பெயராற் போற்றியுள்ளார். தலைமையற்றிச் சிவபெருமானுக்கு வழங்கிய இப்பெயர் இறைவன்பாற் பேரன்புடையராய்ச் சித்தஞ் சிவமாகப் பெற்ற சிவனடி யார்கள் அறுபத்து மூவர்க்கும் உரியதாய் வழங்கப் பெறுவதாயிற்று.

திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெறும் நாயன்மார்களாகிய அறுபத்து மூவர் வாழ்ந்தகாலம், கடைச் சங்ககாலத்தின் இறுதிமுதல் இரண்டாம் நாசிங்க வர்டிகிைய இராசசிங்க பல்லவன் வாழ்த்த எட்டாம் நூற்ருண்டு முடியவுள்ள காலப்பகுதியாகும்.

1. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 11, பகுதி எண். 8