பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1003

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 987

தென்னவஞயுலகாண்ட செங்களு ற் கடியேன் ’

எனப் போற்றப்பெற்ற கோச்செங்கட் சோழர் சங்க காலத்தில் வாழ்ந்த சோழமன்னர் என்பதும், அவ்வேந்தர் பெருமான் சேரமான் கணக்கா லிரும்பொறையொடு பொருது வென்று அம்மன்னனைக் குடவாயிலிற் சிறைப் படுத்தியவர் என்பதும், பொய்கையார் என்னும் புலவர் சேரமன்னனைச் சிறைவீடு செய்தற்பொருட்டுச் சோழரது போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து களவழி நாற்பது" என்னும் பனுவலைப்பாடினர் என்பதும், குடவாயிலிற் சிறைப்பட்டிருந்த சேரமான் கணைக்காலிரும்பொறை சிறைக்காவலனைத் தண்ணிர்தாவெனக் கேட்டு அவன் காலந்தாழ்த்துக்கொணர அத்தண்ணிரை யுண்ணுது பாடிய 74-ஆம் புறப்பாடலாலும் அதன் அடிக்குறிப்பினுலும் கலிங்கத்துப்பரணி மூவருலா முதலிய பிற்கால வரலாற்று இலக்கியங்களாலும் நன்குணரப்படும்.

கோச் செங்களுன் என்னும் சோழ மன்னனுக்கு நல்லடி என்னும் பெயருடைய மைந்தளுெருவன் இருந்தான் என்ற செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டிற் குறிக்கப்பெற்றுள்ளது. நல்லடி என்னும் மன்னனைப் பற்றிய குறிப்பு,

தற்றேர்க், கடும்பகட்டியானைச் சோழர் மருகன் நெடுங்கதிர் நெல்லின் வல்லங்கிழவோன் நல்லடியுள்ளாளுகவும் ” (அகம் - 356) எனப் பரணர் பாடிய அகநானூற்றுப்பாடலிற் காணப் படுகிறது. எனவே கோச்செங்கட் சோழர் சங்ககாலத்தவர் என்பது நன்கு விளங்கும். அவ்வேந்தர் பெருமான் தமிழகத்தில் முதன் முதற்கட்டிய மாடக்கோயில்களைப் பின்வந்த தேவார ஆசிரியர்கள் மூவரும் திருமங்கை யாழ்வாரும் குறித்துப் போற்றியுள்ளமை முன்னர்க் கூறப்பெற்றது.

இனி, சண்டீச நாயனர் காலமும் கண்ணப்பநாயஞர் காலமும் தேவார ஆசிரியர்களுக்குப் பன்னூருண்டுகள் முற்பட்ட தொன்மையனவென்று தெரிகிறது.

மும்மையாலுலகாண்ட மூர்த்தியார் எனப் போற்றப்

பெற்ற மூர்த்திநாயஞர், பாண்டிநாட்டிற் கி. பி. மூன்ரும்