பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1004

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

988

பன்னிரு திருமுறை வரலாறு


நூற்ருண்டில் ஏற்பட்ட களப்பிரர் ஆட்சியில் வாழ்ந்தவ ரென்பதும், இவ்வடியார் மேற்கொண்ட சிவப்பணிக்கு இடர்விளைத்த வடுகக் கருநாடர் மன்னன் தீவினையால் இறந்தொழிய, இம்மூர்த்தி நாயனர் பாண்டிநாட்டில் அரசு வீற்றிருந்து மும்மையால் உலகாண்டார் என்பதும் மூர்த்தி நாயனர் வரலாற்ருல் அறியப்படும். எனவே இவர் வாழ்ந்த காலம் பாண்டிநாட்டிற் களப்பிரர் ஆட்சியொழிந்து கடுங்கோன் என்னும் பாண்டியனது ஆட்சி தொடங்கு தற்கு இடையே அமைந்த காலப்பகுதி எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.

திருமூலர், காரைக்காலம்மையார் காலம் கி. பி. ஐந்து ஆரும் நூற்ருண்டென்பது இந்நூலில் 416-23, 529 ஆம்

பக்கங்களில்) முன்னர் விளக்கப்பட்டது.

கணம்புல்லர், சாக்கியர், அமர்நீதியார், தண்டியடிகள், நமிநந்தியடிகள் ஆகிய அடியார்களேத் திருநாவுக்கரசர் பெயர் குறித்துப் போற்றியுள்ளமையாலும், கரும்பு பிடித்தவர் காயப்பட்டார் அங்கொர் கோடலியால் இரும்பு பிடித்தவர் இன்புறப்பட்டார் 4-102-5 எனவரும் திருவிருத்தத்தில் எறிபத்த நாயனுரைப்பற்றிய குறிப்பு அமைந்திருத்தலாலும் எறிபத்தர்காலத்தவர் புகழ்ச்சோழ நாயனர் ஆதலாலும் இவ்வெழுவரும் அப்பருக்கு முன் கி. பி. ஆரும் நூற்ருண்டளவில் இருந்தவர்கள் எனக் கொள்ளலாம்.

கி. பி. ஏழாம் நூற்ருண்டில் நிலவிய திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஆகிய இவ்விருபெருமக்களுடன் சமகாலத்தவராக விளங்கிய நாயன்மார்கள், அப்பூதி யடிகள், திருநீலகண்டயாழ்ப்பாணர், திருநீலநக்கர், முருகளுர், சிறுத்தொண்டர், குங்குலியக்கலயர், குலச் சிறையார், மங்கையர்க்கரசியார், நின்றசீர் நெடுமாறர் என் போராவர்.

அப்பர் சம்பந்தர் இருவராலும் குறிக்கப்படாமல் சுந்தரரால் மட்டும் குறிக்கப்பட்ட நாயன்மார்களில் ஐயடிகள் காடவர்கோன், கனநாதர், காரியார், அதிபத்தர், கலிக்கம்பர், கலியர், அரிவாட்டாயர், கூற்றுவதாயமூர்,