பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1005

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 989

வாயிலார், முனையடுவார், இடங்கழியார், இயற்பகையார், நேசநாயனுர், இளையான்குடி மாறர், மெய்ப்பொருள் நாயனுர், திருநாளைப்போவார், ஏளுதிநாதர், ஆளுயர், உருத்திரபசுபதியார், திருக்குறிப்புத்தொண்டர், மூர்க்க நாயனுர், சிறப்புலிநாயஞர், திருநீலகண்டக்குயவனுர், புகழ்த்துணையார் ஆகிய அடியார்கள் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலப்பகுதியை யொட்டிச் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்தவர்கள். மேற்குறித்த அடியார்களுள் ஐயடிகள் காடவர்கோளுயனுர், கணநாதர் இருவரும் அப்பர் சம்பந்தர் காலத்திற்கும் சுந்தரர் காலத்திற்கும் இடைப் பட்ட காலத்தில் வாழ்ந்தவர்களாவர்.

நம்பியாரூரர் வரலாற்றுடன் தொடர்புடையவர் களாகிய சடையனுர், இசை ஞானியார், நரசிங்க முனையரையர், விறல்மிண்டர், கோட்புலியார், ஏயர்கோன் கலிக்காமர், மானக்கஞ்சாறர், பெருமிழலைக்குறும்பர், சோமாசிமாறர், சேரமான்பெருமாள் ஆகிய நாயன்மார் பதின்மரும், நம்பியாரூரர் காலத்துப் பல்லவவேந்தராகக் குறிக்கப்பெற்ற கழற்சிங்க நாயனரும் அவர் வரலாற்றுடன் தொடர்புடைய பூசலார், செருத்துணையார் ஆகிய திருத் தொண்டர்களும் சுந்தரர் காலத்தில் வாழ்ந்த நாயன் மார்கள் ஆவர்.

தில்லைவாழந்தனர், பொய்யடிமையில்லாத புலவர், பத்தராய்ப்பணிவார்கள், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார், திருவாரூர்ப் பிறந்தார்கள், முப்போதும் திருமேனி தீண்டுவார், முழுநீறுபூசிய முனிவர், அப்பாலும் அடிச்சார்ந்தார் என்னும் தொகையடியார் களாகிய ஒன்பது திருக்கூட்டத்தாரும் திருத்தொண்டத் தொகையருளிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்திற்கு முன்னும் சுந்தரர் காலத்திலும் அவருடைய காலத்திற்குப் பின்னும் ஆக முக்காலங்களிலும் நிலைபெற்றுவரும் திருத் தொண்டர்களாவர்.

ാr്n്rാ-ജmഞ്ഞ-ൽ

1. ஐயடிகள் காடவர்கோன் நாயகுர்காலம் இதுவென்பது இந்நூலின் 544 - 555-ஆம் பக்கங்களில் முன்னர் விளக்கப்பெற்றது.