பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 85

நாறு செய்வான்' எனத் திருநாவுக்கரசர் இறைவனது முடிவிலாற்றலுடைமையினை விளக்கியவாறே விச்ச தின்றியே விளைவு செய்குவாய்' எனத் தொடங்கும் திருச் சதகப் பாடலில் திருவாதவூரடிகளும் விளக்கிய திறம் இவண் ஒப்புநோக்கி யுணரத்தக்கதாகும். விச்சின்றி நாறு செய்தல் ' என்ற தொடர் முன்னர் நிகழ்ந்த திருவிளை யாடல்களுள் எதனையும் குறித்து வழங்காமை போன்றே அதளுேடு உடன் வைத்து ஒதப்பெற்ற நரியைக் குதிரை செய்தல், நரகரைத் தேவு செய்தல், விரதங் கொண்டாடுதல் என்பனவும் சிவபெருமாளுல் நிகழ்த்தப்பட்ட திருவிளை யாடல்களுள் எதனையும் குறித்து வழங்கியன அல்ல என்பது நன்கு தெளியப்படும்.

இனி “மணியார் வைகைத் திருக்கோட்டில் நின்ற தோர் திறமுந் தோன்றும் ” எனவரும் திருப்பூவணத் திருத்தாண்டகத்தொடர், மதுரையிற் சோமசுந்தரப் பெரு மான் வந்தி யென்னும் தவப்பெருஞ் செல்விக்குக் கூலியா ளாகி மண் சுமந்து கூவி கொண்டு பிரம்படி பட்டு விளை யாடிய நிகழ்ச்சியைக் குறித்து நிற்பது தாளு ? என்பதும் ஈண்டு ஆராயத்தக்கதாகும். வடிவேறு திரிசூலம் தோன் றும் தோன்றும் ' எனத் தொடங்குந் திருப்பூவணத் திருத் தாண்டகத்தின் ஒன்பதாம் திருப்பாட்டில் " மணியார் வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமும் தோன்றும் ” என்ற இத்தொடர் அமைந்துளது. திருவாலவாய்ப் பெரு மானை இறைஞ்சிப் போற்றிய திருநாவுக்கரசர் திருப்பூ வணத்தை வழிபடச் சென்றபொழுது திருப்பூவணத் திறை வர் திருநாவுக்கரசர்க்கு நேரே தோன்றிக் காட்சியளித் தருளினரென்பதும், அத்தெய்வக் காட்சியைக் கண்ணுரக் கண்டு இறைஞ்சிய தாண்டகவேந்தர் வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் எனத் தொடங்குந் திருத்தாண்ட கத்தைப் பாடிப் போற்றினரென்பதும் வரலாறு. இச் செய்தி,

" திருவால வாயமர்ந்த செஞ்சுடரைச் செழும் பொருணுரல்

தருவான நேரிசையும் தாண்டகமு முதலான பெருவாய்மைத் தமிழ்பாடிப் பேணுதிருப் பணிசெய்து மருவார்தம் புரமெரித்தார் பூவணத்தை வந்தடைந்தார் ”

(பெரிய புராணம். திருநாவுக் - 406)

  • திருவாசகம், திருச்சதகம் 96.