பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1011

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் §§§

களாதலால் ஆசிரியர் சேக்கிழார் தம் நூலில் இவற்றை விரித்துக் கூறுவாராயினர்.

இனி நம்பிகற்றுக்கு மாருகச் சேக்கிழார் சிலவற்றை மாற்றிக் கூறியதாகக் கருதுவாருமுளர் வகை நூலையும் விரிநூலையும் ஒப்பவைத்து நோக்குங்கால் அக்கருத்து தவருதல் நன்கு புலனும்.

(1) அடியாரது கோவணத்துக்கு ஈடாகத் தன்பெருஞ் செல்வத்தையும் தன்னையும் தன் மனைவியையும் அமர் நீதியார் ஈந்தனர் என நம்பியாண்டார் நம்பி குறித்தனர். அவரால் தன் பெருஞ் செல்வமும் எனக் குறிப்பிட்ட செல்வத்துள், தம் பொருளென்ப தம்மக்கள் என்ற வ8 ம்ை மக்கட் செல்லமும் அடங்கும் எனவுணர்ந்த சேக்கிழார், அமர்நீதியார் மனைவியார் மைந்தர் ஆகிய மூவரும் அடியார் கோவணத்துக்கு ஈடாகத் து.ேயில் ஏறினர் என விளக்கமாகக் கூறியுள்ளார். சேக்கிழார் குறித்தவண்ணம் அமர்நீதியார்க்குக் குழந்தையுண் டென்பது, பழையாறை வடதளியில் அமர்நீதியார் மனைவி யாருடன் இறைவனை யிறைஞ்சும் நிலையில் அமைந்த சிற்பத்தில் அமர்நீதியார் மனைவியார் தம்மைந்தனுகிய குழந்தையை இரு கைகளிலும் ஏந்திய நிலையிற் காணப் படுவதாலும் இராசராசேச்சரத்திலுள்ள அமர்நீதியார் சிற்பத்தில் தராசுத் தட்டிலே தாய் தந்தை நடுவில் குழந்தை காணப்படுவதாலும் நன்கு விளங்கும்.

(2) திருஞானசம்பந்தர் விடமேறிய பெண்ணை எழுப் பினர் என நம்பியாண்டார் நம்பி குறித்திருக்கவும் எலும்பைப் பெண்ணுக்கியதாகச் சேக்கிழார் மாற்றிக் கூறி யுள்ளார் என்பாருமுளர். இக்கருத்து ஏற்புடையதன்று. வெய்யவிடம், மேவியிறந்த அயில் வேற்கண் மடமகளை வாவென் றழைப்பித்திம் மண்ணுலகில் வாழ்வித்த சீர் நின்ற செம்மைச் செயலுடையான் என நம்பியாண்டார் நம்பிகள் இச்செய்தியை விரித்துக் கூறியுள்ளார். இறந்த மடமகளை வாவென்று அழைப்பித்து இம் மண்ணுலகில் வாழ்வித்த சீர் நின்ற செம்மைச் செயல் எனக் குறித்தமை யால், விடந்தீண்டி இறந்த பெண் அப்பொழுது உடம்புடன் அங்கில்லை யென்பதும் ஆளுடையபிள்ளையார் அப்பெண்ணை வா என்று அழைப்பித்து இம்மண்ணுலகில் வாழ்வித்தார்