பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1014

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

998

பன்னிரு திருமுறை வரலாறு


பொய்யடிமையில்லாத புலவர் ' என்னும் இத்தொடர் தனியடியாரைச் சுட்டாது திருக்கூட்டத்தாராகிய தொகை யடியார்களையே சுட்டிய தென்பது, கபிலர் பரணர் நக்கீரர் முதல் நாற்பத்தொன்பது பல் புலவோர் ' என நம்பியும் அவர் கருத்தையடியொற்றிய நிலையிற் சேக்கிழாடிகளும் கூறிய விளக்கங்களால் இனிது விளங்கும். இத்தொடர் இக்காலத்தில் ஒரு சில கருதுவது போன்று மாணிக்க வாசகர் போன்ற தனியடியார் ஒருவரைக் குறித்த தொடராக இருந்திருக்குமானுல், தனியடியார் அறுபத்து மூவர் ; தொகையடியார் ஒன்பதின்மர் என இந்நாட்டில் நெடுங்காலமாக வழங்கிவரும் வழக்குக்கு மாருகத் தனியடியார் அறுபத்து நால்வர். தெ. கையடியார் எண்மர் எனச் சொல்ல வேண்டிய குழப்பநிலை ஏற்பட்டு விடும்.

இரண்டாம் இதன் சராசசோழன் குடந்தையையடுத்துத் தன் பெயரால் அமைத்த இராசாச புரத்தில் கட்டிய இராசராசேச்சரத் திருக்கோயில விமானத்தில் திருத் தொண்டத் தொகையடியார்களின் பெயரும் பீடும் பொறித் தமைத்த சிற்பங்களில் பொய்யடிமையில்லதை புலவர் எனக்குறித்த சிற்பத்தில் அடியார்கன் ஒன்பதின்மர் இடம் பெற்றுள்ளனர். நம்பிகள் குறித்த சங்கப்புலவர் நாற்பத தொன்பதின்மரைச் சுட்டும் முறையில் அமைந்த அச் சிற்பத்தில் ஒன்பதின்யரை வெளிப்பட அமைத்து நாற்பதின்மரை உய்த்துணர வைத்த திறம் வரலாற்று ஆராய்ச்சியாளருக்குப் பெருமகிழ்ச்சி யளிப்பதாகும். இவ்வாறு தொகை வகை, விரியாகிய நூல்களோடும் வரலாற்றுச் சிற்பத்துடனும் ஒப்புநோக்கும்வழி பொய் யடிமையில்லாத புலவர் என்பார் தொகையடியார் களேயன் றித் தனியடியாரல்லர் என்பது ஐயத்திற் கிடனின்றித் தெளிந்துணரப்பெறும் வரலாற்றுண்மை யாதல காணலாம,

5. காரியார் சிவனைப்பாடிக் கயிலை புக்கவர் என்பது நம்பி கூற்று. அவர் மூவேந்தர் மீது கோவை பாடிப் பெற்ற பொருளைக்கொண்டு சிவன் கோயில் கட்டி முத்திபெற்றவர் என்பது சேக்கிழார் கூற்று” என மாறுபாடு காட்டுவர் டாக்டர் இராசமாணிக்களும்.