பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1016

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1000

பன்னிரு திருமுறை வரலாறு


களுளொன்ருகிய மருகல் நாட்டைச்சார்ந்த தஞ்சை எனவும் விளக்கும் முறையில்

செழுநீர் மருகல் நன்னட்டமர் தஞ்சைச் செருத்துனேயே எனக் குறித்தார் நம்பியாண்டார் நம்பிகள். இக்குறிப் பினை புளங்கொண்டு

  • பொன்னிநீர் நாட்டு மருகல் நாட்டுத் தஞ்சாவூர் ” என ஆசிரியர் சேக்கிழார் குறித்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கத்தகுவதாகும்.

இனி, கண்ணப்ப நாயனுரைப்பற்றி நக்கீச தேவரும் கல்லாட தேவரும் கூறியவற்றிற்கும் சேக்கிழார் கூறிய வற்றிற்கும் வேறுபாடுகள் உள்ளன என்றும், 1. கண்ணப்பர் நாடோறும் சிவனேப் பூசித்தமை, 2. அவர் நாயுடனே காளத்தி மலைமீது இறைவன்முன் இருந்தமை, லிங் கத்தின் ஒரே கண்ணில் திண்ணணுர் தம் இரு கண்களையும் அப்பு முயன்றமை என்பன பெரிய புராணத்திற்கு மாருகப் பதிளுெராந் திருமுறையிற் காணப்படும் வேறுபாடுகள் என்றும் அறிஞர் இராசமாணிக்களுர் அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

1. கண்ணப்பர் காளத்தியப்ப ைவழிபட்ட ஆறு நாட்களில் இறுதிநாளாகிய ஆரும் நாள் நீங்கலாக ஏனைய ஐந்து நாட்களிலும் இடையீடின்றி வழிபட்ட செய்தியைக் குறிக்கும் முறையில் நாடொறும் என்று கூறப்பட்டது.

2. திண்ணனருடன் வேட்டை நாயும் காளத்தி மலையிற் சென்றது என்ற செய்தியைச் சேக்கிழாாடிகள் சிறப்பின்மை கருதி வெளிப்படக் கூருதுவிட்டாலும், இறைவனை வழிபடச் சென்ற சிவகோசரியார், இறைச்சி எலும்புடன் இலையும் செருப்படியும் நாயடியும் திருவல கால் மாற்றிய செய்தியைச் சேக்கிழார் தெளிவாகக் குறித் துள்ளமையால் கண்ணடயருடன் வேட்டை நாயும் சென்றது எனப் பதினுெராந் திருமுறையிலுள்ள அச் செய்தி சேக்கிழார்க்கு உடன்பாடாதல் இனிது புலனும்,

3. லிங்கத்தின் ஒரே கண்ணில் திண்ணணுர் தம் இரண்டு கண்களையும் அப்ப முயன்ருர் என்று நக்கீரரோ