பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1018

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1002

பன்னிரு திருமுறை வரலாறு


டைய பிள்ளையார் அழுததற்குக் காரணம் தந்தையாரைக் காணுத அச்சமே எனச் சேக்கிழாரடிகள் கூறவேயில்லை. தந்தையார் குளத்தில் மூழ்கிய நிலையில் அவரைப் பிரித் துறைதலாற்ருத தனிமை நிலையினைத் தலைக்கீடாகக் கொண்டு ஈசர் கழலிடத்தே முன்னைப்பிறப்பிற் கொண்டுள்ள முன்னுணர்வு மூளுதலால் பிரம தீர்த்தக் கரையில் நின்றரு ளும் பிள்ளையார் அழத்தொடங்கினர் என்ற செய்தியை,

" மறைமுனிவர் மூழ்குதலு மற்றவரை முற்காணு

திறை தரியா ரெனு நிலைமை தலைக்கிட ஈசர் கழல்

முறைபுரிந்த முன் னுணர்வு முளஅழத் தொடங்கிளுக்

நிறை புனல் வாவிக்கரையில் நின்றருளும் பின் 2ளயார் ' எனவரும் பாடலில் ஆசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார். ஆகவே ஆளுடைய பிள்ளையார் அழுததற்குக் காரணம் தந்தையைப் பிரிந்த அச்சமன்றென்பதும், தந்தையைப் பிரிந்தமை தலைக்கீடாக, ஈசர் கழல் முறை புரிந்த முன்னுணர்வு பிள்ளையார்:ால் மூண்டெழுந்தமையே அவர் அழுததற்குக் காணம் என்பதும் சேக்கிழார் கருத்தாதல் நன்கு புலனும்.

இனி, ஆளுடைய பிள்ளையார் அழுதமைக்குக் காண மாகப் பட்டினத்தடிகள் குறித்த பசி என்பது இவ்வுலகில் ஏனைய பிள்ளைகள் பால் இயல்பாகத்தோன்றும் அயர்ச்சியை விளக்கும் பசியாகாமல் ஞானக்தின் திருவுருவாகிய பிள்ளையாரை மேன்மேல் வளர்த்தற்குரிய மெய்யுணர்வுப் பசியாக அமைந்த திறத்தையும். அப்பசியைத் தனித்தற்கு இறைவரருளால் அம்மையார் குழைத்தளித்த பாலமுதம் வெறும் உடற்பசியைத் தணிக்கும் ஊனப்பாலாகாமல் மெய் யுணர்வு வேட்கையை நிறைவுசெய்தற்குரிய ஞானப்பாலாக அமைந்த தன்மையினையும்,

தாதையொடு வந்த வேதியச் சிறுவன் தளர் நடைப் பருவத்து வளர்பசி வருத்த அன்னயோ வென்றழைப்ப முன்னின்று ஞான போனகத்தருள் அட்டிக் துழைத்த ஆணுத் திரளை அவன்வயின் அருள

எனவரும் தொடரில் திருவெண்காட்டடிகள் தெளிவாக விளக்கிய திறம் உணர்ந்து போற்றத் தகுவதாகும். ஆளுடைய பிள்ளையார்க்கு உமையம்மையார் அளித்த ஞானபோனகத்தியல்பினை,