பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1019

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்ட புராணம் £003

  • மலையரையன் மடப்பாவை

நற்கண்ணி அளவிறந்த ஞானத்தை அமிர்தாக்கிப் சொற்கிண்ணத் தருள் புரிந்த போனகம் ' என நம்பியாண்டார் நம்பிகள் சிறப்பித்துக் கூறியுள் ளமை திருவெண்காட்ட டிகள் கருத்திற்கியைந்த சிறந்த விளக்க மாகும.

ஒன்பதாந் திருமுறையில் நம்பிகாடநம்பி என்பார், சுந்தரரும் சேரமானும் வெள்ளானைமீது இவ்வுடலோடு சென்றனர் எனத் தெளிவாகக் கூறியுள்ளார் என்பர் டாக்டர் இராசமாணிக்களுர். இக்கூற்று ஏற்புடையதன் றென்பது (இந்நூல் 387-ம் பக்கத்தில் முன்னர் எடுத்துக் காட்டி விளக்கப்பட்டது.

சேக்கிழாரடிகள் தம் நூலில் புதிய செய்திகள் சில வற்றைச் சேர்த்துக் கூறி ரைன்ருே தொகை வகையா க்ய முன்னுரல்களின் செய்திகள் சிலவற்றை மாற்றிக் கூறினுரென்ருே எண் ணு, ற்குச் சிறிதும் இடமில்லை யென்பதும், முன்னேர் நூலின் மொழிவழி நின்று திருத் தொண்டர்களின் மெய்ம்மை வரலாறுகளைத் தம் நூலில் விரித்துக் கூறியுள்ளார் என்பதும் மேல் எடுத்துக் காட்டிய குறிப்புகளால் இனிது விளங்கும்.

சேக்கிழார் எடுத்தாண்ட முன்னுரற் சான்றுகள்

தெய்வப்புலமைச் சேக்கிழார் நாயனுர், தாம் இயற்றிய வரலாற்றுக் காப்பிகமாகிய திருத்தொண்டர் புராணத்தில், பழந் தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம் முதல் தம் காலத்திற்குச் சிறிது முன் தோன்றிய நூல்களிருகவுள்ள செந்தமிழ்த் தொன்னூல் களின் கருத்துக்களையும் சொற் பொருள் நலங்களையும் :ென்னேபோற் போற்றி எடுத் தாண்டுள்ளார்.

ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும் மனையறத்தின் பயணுக அவ்விருவரையும் பிறப்புத்தோறும் சேர்த்து வைப்பதும், பிரித்து விலக்குவதும் ஆகிய இருவகை ஊழினும் இருவருள் ளமு: எக்காலத்தும் ஒன்றி வாழ்தத்கு உயர்த்தும் நல்லூழின் ஆணையினுல் ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஓரிடத்து எதிர்ப்பட்டுக் காண்பர் என்பதனை,