பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1022

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1006

பன்னிரு திருமுறை வரலாறு


வரும் ஐந்திணைகளுள் நடுவண் நிற்பதாகிய பாலைத்தினை, நண்பகற்பொழுது வேனிற்காலத்துடன் கூடிய நிலையிற் கருதிச் செல்லும் வழியினை இடமாகவுடையது ' என்பது இந்நூற்பாவின் பொருளாகும். எனவே தமிழகத்திற் பாலை என்பதோர் தனி நிலம் இல்லையென்பதும் வேனில் வெப்பத்தால் வளங்குன்றிய வெவ்விய சுரவழியே பாலைத் திணைக்குரியதென்பதும் தொல்காப்பியர்ை கருத்தாதல் பெறப்படும்.

' வானமூர்ந்த வயங்கொளி மண்டிலம்

நெருப்பெனச் சிவந்த உருப்பவி. ரங்காட் டிலையில மலர்ந்த முகையி லிலவம் ” (அகநானு று - 1t} என வரும் பாடல், காடுறையுலகமாகிய முல்லை நிலம் வேனில் வெப்பத்தால் தன்னியல்பு திரிந்து பாலையாயின செய்தியைப் புலப்படுத்துகின்றது. முக்கண்ணுன் மூவெயிலும்

உடன் றக்கால் முகம்போல வொண் கதிர் தெறுதலித் சிறருங் கணிச்சியோன் சினவலின் அவ்வெயில் ஏறுபெற் றுதிர்வன போல் வரையிலாந்து, இயங்குநர் ஆறுகெட விலங்கிய அழலவிர் ஆரிடை ' {பாலைக்கலி-1}

என்பது, மைவரையுலகமாகிய குறிஞ்சி நிலம் வேனிற் பொழுதிற் கதிரவன் வெம்மையால் தன்னியல்பு திரிந்து பாலையாயின செய்தியைப் புலப்படுத்துகின்றது. இவ்வாறு முல்லையும் குறிஞ்சியும் கேனில் வெப்பத்தால் தம்மியல்பு திரிந்து பாலையாயின வாறுனர்ந்த இளங்கோவடிகள்,

" வேனலங் கிழவனுெடு வெங்கதிர் வேத்தன்

தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரித்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளுங் காலை " (சிலப் - காடுகாண் 82-7)

என வேனிற் பருவத்தே நண்பகற்பொழுதிற் கதிரவன் வெம்மையால் தன்மை திரிந்த சுரத்தினைப் பாலை என்ற பெயராற் குறித்துள்ளார்.

" குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே காலம் பற்றிப் பாலையாகும் ..... தொல்காப்பியனுர் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர். வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர். பிறர் பகவதியையும் ஆதித்தனையும்