பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1024

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1008

பன்னிரு திருமுறை வரலாறு

" அங்கண் முல்லையின் தெய்வமென் றருந்தமி ழுரைக்கும்

செங்கண் மால்தொழுஞ் சிவன் மகிழ் திருமுல்லை வாயில் '

(பெரிய - திருக்குறிப்புக் 18)

என்ருர் சேக்கிழாரடிகள்.

ஒரு திணைக்கண்ணே நிலைத்து வாழும் மக்கட் பெயர் நிலப்பெயரும் தொழிற்பெயரும் என இருவகைப்படும். ஆயர் என்பது முல்லை நிலத்தில் வாழ்வாரைக் குறித்து வழங்கும் நிலப் பெயராகும். வேட்டுவர் என்பது & --~~ * * 参见 交通 - و مش قة - - κέικ 没 வேட்டைத் தொழில் செய்வாரைக் குறித்து வழங்குந் தொழிற் பெயராகும், இவையே யன்றிக் குழுப்பற்றியும் மக்களுக்குப் பெயர் அமைதலுண்டு. இப்பெயர் வகையினை,

ஆயர் வேட்டுவர் ஆடுஉத் திணைப் பெயர் ஆவயின் வரூஉங் கிழவரு முளரே " (தொல் அகத் 21) எனவரும் நூற்பாவிலும்,

  • நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே

வினைப்பெயர் . டைப்பெயர் பண்புகொள் பெயரே '

தொல் - பெயர் 11) எனவரும் நூற்பாவிலும் தொல்காப்பியர் விரித்துரைப்பாச். இங்ங்னம் நானில மக்கள் தாம் வாழும் நிலம்:ற்றியும் மேற் கொண்ட தொழில் பற்றியும் பெக் கூறப் பேற்றுப் பல் வேறு குலத்தினராகப் பரவி வாழும் இ: பினே,

  • ஆய நானிலத் தமைதியில் தத் தமக் கடுத்த

மேய செய்தொழில் வேறுபல் குலங்களின் விளங்கித் தீய என்பன கனவிலும் நினைவிலாச் சிந்தைத் தூய மாந்தர் வாழ் தொண்டை நாட் டியல்பு சொல்

வரைத்தோ 1பெரிய - திருக்குறிப்பு - 47;

養姿

எனத் தொண்டை நாட்டியல்பில் வைத்து அருண் மொழித் தேவர் விளக்கியுள்ளமை அவர் தம் தொன் னுாற் பயிற்சி யினையும் நாட்டின் நடைமுறையினை நன்குனர்ந்த அவரது உலகிய லறிவையும் நன்கு புலப்படுத்துவதாகும்.

வண்புகழ் மூவராகிய சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பெலும் தமிழகத்திலே அவ் வேந்தர்க்குரிய படைவீரர்கள் முறையே பனம்பூவையும் வேப்பம்பூவினையும் ஆத்திப்பூவினையும் தத்தமக்குரிய அடையாளப் பூவாகக் கொண்டனர் என்பது,