பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1025

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் i{}{}}

' போந்தை வேம்பே ஆர் எனவரூஉம்

மாபெருந் தானேயர் மலேந்த பூவும் ' (தொல் - புறத் - 5) எனவரும் தொடராற் புலனும். நின்றசீர் நெடுமாறனுகிய பாண்டியன் நெல்வேலிச் செருக்களத்தில் வடபுல வேந்தர் களைப் பொருது வென்று வாகைமாலை சூடுபவன், தன் குடிக்குரிய வேப்பமாலையுடன் அதனைச் சூடிக்கொண்டான் என்பதனை,

பனை நெடுங்கை மதயானைப் பஞ்சவகுர் படைக் குடைந்து முனையழிந்த வடபுலத்து முதல் மன்னர் படைசரியப் புனையு நறுந் தொடைவாகை பூழியர்வேம்புடன் புனைந்து ” எனவரும் தொடரில் சேக்கிழாரடிகள் குறித்துள்ளார்.

புறத்தினை ஏழனுள் ஒன்ருகிய உழிஞைத்தினைக்குரிய துறைகளுள் அகத்தோன் வீழ்ந்த நொச்சி என நொச்சியை ஒரு துறையாகக் கூறுவர் தொல்காப்பியம், பகைவரது சேனே தன்னகர்ப் புறத்தே சூழ்ந்து முற்றுகை யிட்ட நிலையில் அகத்தேயுள்ள மன்னன் தனக்குரிய அரணைக்காத்து நிற்றலாகிய செயல் நொச்சி யெனப்படும் என்பதும், அத்தொழிலில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் அதற்க அடையாளமாக நொச்சிப் பூவைச் சூடிக் கொள்வர் என்பதும் சங்க இலக்கியங்களால் அறியப் படும் போர்முறையாகும். நொச்சியாவது காவல் ; இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங் கொள்க... இக் கருத் தானே நொச்சி வேலித் தித்தன் உறந்தை ” (அகநா - 122 என்ருர் சான்ருேரும் " என நச்சிஞர்க் கினியர் தரும் விளக்கம் இங்கு நினைக்கத் தக்கதாகும். புகழ்ச்சோழருடைய பெருஞ்சேனை வீரர்கள் வஞ்சி சூடி அதிக கோன் நாட்டின் மேற் சென்று அதிகர்கோனது குறுக்பொறையூரை முற்றுகையிட்டு அந்நகரத்தின் மதிலைக் கட்டழித்து அதனைக் காவல் செய்திருந்த நொச்சி வீரர்களை வீழ்த்திய திறத்தினை,

முற்றும்பொரு சேனைமுனைத் தலையில்

கற்றிண் புரிசைப் பதிகட் உழியப்

பற்றுந்துறை நொச்சி பரிந் துடையச்

சுற்றும் படை வீரர் துணித்தனரே ' (பெரிய - புகழ்ச் - 28) எனவரும் பாடலில் சேக்கிழார் குறித்துள்ளார். ஆசிரியர் சேக்கிழார் பன்னிருபடல முடையார் கொள்கையின்படி எயில் காத்தலை நொச்சித்திணை எனத் தனியொரு

థీడ్రీ