பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1026

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1010

பன்னிரு திருமுறை வரலாறு


திணையாகக் கொள்ளாமல் தொல்காப்பியர் கொள்கைப்படி உழிஞைத்திணையில் அடங்கிய ஒரு துறைவாகவே கொண்டார் என்பது, பற்றுந்துறை நொச்சி எனக் குறித்துள்ளமையால் இனிது விளங்கும்.

காதலனை இழந்த மனைவி தவம்புரிந்தொழுகுதலாகிய முறையினைக் காதலன் இழந்த தாபத நிலை எனக் காஞ்சித் திணைத்துறைகளுள் ஒன்ருகக் கூறுவர் தொல் காப்பியர். மருள் நீக்கியாரது தமக்கையாராகிய திலகவதி யார், தமக்குக் கணவராக மனம் பேசிய கலிப்பகையார் திருமணம் நிகழ்தற்கு முன்னே வேந்தற் குற்றுழி வட நாட்டின்மேற் போருக்குச் சென்றவர் போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ்கொண்டாராகத் தாமும் உயிர்விடக் கருதினர். தம்பியார் உளராகவேண்டும் என வைத்த பேரருளால் திலகவதியார் அம்பொன் மணி நூல் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி மனைத்தவம் புரிந்தார் ஆதலால் அவர்கொண்ட தவநிலை தொல்காப்பியர் குறித்த தாபதநிலையின் பாற்படும் என்பது விளங்க அவருக்குத் தாபதியார் (பெரிய-திருநாவுக் - 78) என்ற பெயரினைச் சேக்கிழார் படைத்து வழங்கியுள்ளமை கூர்ந்து நோக்கத் தகுவதாகும்.

எல்லாம்வல்ல கடவுளை நாயகனுகவும் உயிராகிய தம்மைத் தலைவியாகவும் கருதி இன்றிய ையாத அன் புரிமையினுல் கடவுளை விரும்பி வழிபடும் மரபு தொல் காப்பியனர் காலத்திலேயே தமிழகத்தில் நிலைபெற்று வழங்கியதென்பது,

  • காமப் பகுதி கடவுளும் வரையார்

ஏனேர் பாங்கினும் என்மஞர் புலவர் {28}

எனவரும் புறத்திணையியற் சூத்திரத்தால் உய்த்துணரப் படும். திருஞானசம்பந்தப் பிள்ளையார் உமையம்மையார் அளித்த ஞானப்பாலைப் பருகித் தமக்கு அருள் புரிந்த இறைவனைத் தம் தந்தையார்க்கு எம்மை இது செய்த பிரான் இவன் எனக் காட்டும் நிலையிற் பாடியருளிய தோடுடைய செவியன்’ என்னுத் திருப்பதிகம், பிரம புரத்துறையும் பெருமானைக் காதலித்த தலைவி யொருத்தி தன் உள்ளங் கவர்கள் வகிைய அம்முதல்வனை நினைந்திரங் கும் நிலையில அகப்பொருட்டுறை அமையப்பெற்றதென்ப