பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1027

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 10 ii

தனையும், இத்திருப்பதிகத்தில் அமைந்துள்ள இனிய தமிழியல் வழக்காகிய அகப்பொருட் குறிப்பினைப் பிள்ளை யாரின் தந்தையாகிய சிவபாத விருதயர் ஒர்ந்து உணர்ந்து கொண்டார் என்பதனையும்,

" தாதையார்க்கு, எம்மையிது செய்தபிரான் இவனன்றே

என விசைத்தார்

எனவும்,

கூறு மருந்தமிழின் பொருளான குறிப்போர்வார் . எனவும் வரும் தொடர்களில் ஆசிரியர் குறித்துள்ளமை, திருமுறை நூல்களில் இறைவனைத் தலைவனுகக் கொண்டமைந்த பாடற் பொருள்களையறிந்து கொள்ளுதற் குரிய சிறந்த விளக்கமாதல் உணர்ந்து மகிழ்தற்குரிய தாகும்.

வாகைத்தினையுள் ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுதொழிலிற் சிறந்தோரது வென்றியை அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம்’ என்ற தொடரில் தொல்காப்பியர் குறிப்பிடுவர். இத்தொடரினை அடியொற்றி அறு தொழிலோர் எனக் குறித்தார் திருவள்ளுவர். முன்ளுேர் குறித்த இக் கருத்தினையுளங்கொண்டு,

அறுதொழிலின் வைதிக மாநெறி'

(பெரிய சம்பந்தர் - i158)

என வேத நெறியைச் சிறப்பிப்பார் சேக்கிழாரடிகள்.

முடியுடை வேந்தருங் குறுநில மன்னரும் முதலா யிளுேர் ஆடல் பாடல் முதலிய கலத்திறங்களைக் கண்டுங் கேட்டும் மகிழும் இன்ப விளையாட்டினைப் பண்ணைத் தோன்றிய தொல் - மெய்ப் - 1) எனவரும் நூற்பாவிற் பண்ணை என்ற சொல்லாற் குறித்தார் தொல்காப்பியர். அச்சொற் பொருளை விளக்கும் முறையில் அமைந்தது,

" பாடலாடல் இன்னியங்கள் பயிறல் முதலாம்

பண்ணையினில், நீடு மினிய விநோதங்கள் :

(பெரிய - கழறிற் - 154)

எனவரும் பெரிய புராணத் தொடராகும்.

நிறைமொழி மாந்தராகிய பெரியோர், இவ்வாறு ஆகுக' எனத் தகது ஆணையாற் சொல்லப்பட்டு,