பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1028

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1012

பன்னிரு திருமுறை வரலாறு


அவ்வாற்றல் அனைத்தையும் தன்கண் பொதிந்து வைத் துள்ள செறிவுடைய நன்மொழியே மந்திரம் எனப்படும் என்பதனை,

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளத்த மறைமொழி தானே மந்திரம் என்ப" (தொல் - செய் - 171)

எனத் தொல்காப்பியரும், அவரது வாய்மொழியை அடியொற்றி,

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும்' (திருக்குறள் -28)

எனத் திருவள்ளுவரும் குறித்துள்ளார்கள். இறைவன் திருவருள் பெற்ற திருஞானசம்பந்தர், எந்தை தனி பள்ளியுள்க வினைகெடுதல் ஆணை நமதே (2-84-11) எனவும், ஆன சொன் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நடிதே (2-85-11) எனவும் தம்மேல் ஆணையிட்டும், செய்வினை வந்தெமைத் தீண்டப்பெரு திருநீலகண்டம்' என இறைவனது திருநீலகண்டத்தின் மேல் ஆணையிட்டும அருளிக் கூறிய மொழிகள், ஆசிரியர் தொல்காப்பியனுர் குறித்த மந்திரச் செய்யுள் வகையில் அடங்குவன என்பதனை,

  • ஆயகுறிப்பினில் ஆன நிகழ அருளிச்செய்து

து.ாயபதிகத் திருக்கடைக் காப்புத் தொடுத்தணிய

மேய அப் பொற்பதி வாழ்பவர்க்கேயன் றி மேவும் அத்தாள்

தீயபணிப்பிணி அந்நாடடங்கவும் தீர்ந்த தன்றே

(பெரிய சம்பந்தர் - 338)

எனவரும் பாடலில் சேக்கிழார் புலப்படுத்தியுள்ளமை காணலாம்.

பல பிறப்புக்களிலும் நல்லறங்களை விரும்பி நிகழ்த்திய நற்றவத்தின் பயனுகச் செம்மை மனத்துடனே ஐம்புல வுனர்களைத் துறந்து மெய்யுணர்வு பெற்று இறைவன் திருவடி நீழலில் இன்புற்றுறைதலே வீடுபேருகும் என்பதனை,

  • சேவடி படருஞ் செம்மல் உள்ளமொடு

நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்துறையும் செலவு'

tதிருமுருகாற் - 62-64)

என நக்கீரர் குறித்துள்ளார். திருநாளைப் போவார்க்குத் தில்லையம்பலவர் வீடுபேறருளிய திறத்தை,