பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1031

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் $0.15

  • சினச் சுறவின் கோடு நட்டு

மனச் சேர்த்திய வல்லணங்கினன் மடற் ருழை மலர் மலைந்தும் ” (பட்டினப் - 86 - 88) எனவரும் தொடரிற் கடியலூர் உருத்திரங்கண்ணுர் குறித்துள்ளார். நெய்தனில மக்கள் செய்யும் இவ்வழி பாட்டினை,

  • சுறவமுள் மருப்பு அணங்கு அயர்வன கழிச்சூழல்' (7) எனத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் ஆசிரியர் குறித்துள்ளமை காணலாம்.
  • விழவரு வியலா வனத்து (பட்டினப் - 158) எனவரும் பட்டினப்பாலைத் தொடரை அடியொற்றி யமைந்தது,

விழவருதன விளங்கொளி மணிநெடு வீதி (பெரிய ஏயர் . 3) எனவரும் பெரிய புராணத் தொடராகும்.

அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும் நல் லாளுெடு பகடோம் பியும் தான் மறையோர் புகழ் பரப்பியும் (பட்டினப் 200 - 2) எனவரும் பட்டினப்பாலைத் தொடரை நினைவு படுத்தும் முறையிலமைந்தன, சண்டேசுர நாயனுர் புராணத்தில்

  • யாகம் நிலவு சாலைதொறும் மறையோர் ஈந்த அவியுணவின் பாகம் துகர வரும் மாலும் அயனும் ” (4) எனவும்,

தீம்பாலொழுகப் பொழுது தொறும் ஓமதேனுச்

செல்வனவும் (5)

எனவும் வரும் தொடர்களாகும்.

மழை பெய்யும் பருவத்துப் பெய்யாது பொய்க்குமாயின் மழைத்துளியை உணவாகக் கொள்ளும் வானம்பாடி என்னும் பறவை வாட்டமுற்று வருந்தும் என்பது,

" தற்பாடிய தளியுணவின், புட்டேம்பபுயல் மாறி (பட்டினப் -3-4) என வரும் பட்டினப்பாலைத் தொடரால் அறியப்படும்.

தளியுணவின் புள் தேம்ப எனவரும் இத்தொடரை,

உறையுணவு கொள்ளும் புள் தேம்ப (பெரிய-சம்பந்i-387) எனச் சேக்கிழாரடிகள் எடுத்தாண்டு பொருள் விரித் துள்ளமை அறிந்து மகிழத் தக்கதாகும்.