பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1032

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

筠盘密 பன்னிரு திருமுறை வரலாது

ஊடியார் நலத்தேம்ப ஒடியெறிந்து ’ {கலி - 88) எனவரும் கலித்தொகைத் தொடரில் ஒடிய எறிந்து என்பது ஒடியெறிந்து என விகாரமாயிற்று. இங்ஙனம் சிதைந்து வழங்கும் இச்சொற்ருெடாை,

ஒடியெறிந்து வாரொழுக்கி (கண்ணப்பர் - 751 எனக் கண்ணப்ப நாயனுர் புராணத்தில் ஆசிரியர் எடுத் தாண்டுள்ளார்.

அகநானூற்றுக் கடவுள் வாழ்த்தில், * கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்

தாசன் மாலையன் மலைந்த கண்ணியன் எனச் சிவபெருமானுக்கு ஒர் விசேடமாக இட்ட தாரும் அழகுக்கு இடும் மார்பின் மாலையும் போர்ப்பூவா சூடும் கண்ணியும் குறிக்கப் பெற்றன. இத்தொடர்க்குப் பழைய குறிப்புரை யாசிரியர் : இனித் தார் சேர்ப்பதாகவும், மாலை கட்டுவதாகவும், கண்ணி தனித்துக் தொடுப்பதாகவும் இவ்வேறுபாடுகள் என உரைப்பாரும் உளர் ” என வேருெரு விளக்கமும் தந்துள்ளார். இவ்வாறே புறநானூற்றுக் கடவுள் வாழ்த்திலும்,

கண்ணி கார் நறுங் கொன்றை காமர் வண்ணமார்பிற் ருருங் கொன்றை "

எனக் கண்ணி தார் என்பன குறிக்கப்பெற்றன. இவ்வாறு நால்வகைப் பூக்களால் தொடுக்கப்படும் காலைகள் தொடுத்தல் வேறுபாட்டாற் பலதிறப்படுதல், முரு . நாயஞர் புராணத்தில்,

' கொண்டு வந்து தனியிடத்தி னிருந்து கோ க்கும்

கோவைகளும் இண்டைச் சுருக்கும் தாமமுடன் இணைக்கும் வாசமலைகளும் தண்டில் கட்டும் கண்ணிகளும் தாளிற் பிணைக்கும்

பிணையல்களும் துண்டா திரைக்குந் தொடையல்களும் சமைத்து நுடங்கும்

நூன்மார்பன் 9, எனவரும் செய்யுளில் ஆசிரியர் வகைப்படுத்தி விளக்கி யுள்ளார்.

செவ்வானத்தையொத்து விளங்கும் சிவபெருமானது திருமேனியில் மர்பில் அணியப்பெற்று விளங்கும் பன்றிக் கொம்புக்கு அத்தகைய செவ்வானத்திலே விளங்கும்