பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1034

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1018

பன்னிரு திருமுறை வரலாறு


ஆயினும் அவர்களுக்குப் பகை முதலியவற்ருல் வரும் இடர் நீக்கி மன்னுயிர்களைத் தன்னுயிர் போற் பேணிக்காப்பவன் வேந்தனே ஆதலின் அவனே மலர்தலை உலகிற்கு உயி ரெனச் சிறந்தவன் ஆவன். இதன.

நெல்லு முயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம் அதனுல், யானுயி ரென்பதறிகை வேன்மிகு தானே வேந்தர்க்குக் கடனே (புறம் - 185) எனவரும் பாடலில் மோசிகீரனுர் அறிவுறுத்தியுள்ளார். இப்பாடற் பொருளே,

மண்ணுக்குயி ராமெனு மன்னவளுர் (பெரிய - புகழ்ச் - 33) என உடன்பாட்டு முகத்தானும்,

  • பன்முறை ஞாலமெல்லாம் பாலித்து ஞாலங்காப்பாள்

தன்னெடுங் குடைக்கீழ்த் தத்தம் நெறிகளிற் சரித்துவாழும் மன்னரையின்றி வைகு மண்ணுல கெண் துங்க ல இன்னுயிரின்றி வைகும் யாக்கையை ஒக்கும் என் பார் .

! பெரிய - மூர்த்தி 29) என எதிர்மறை முகத்தானும் ஆசிரியர் எடுத்தாண் டுள்ளமை மனங்கொளத்தக்கதாகும்.

  • வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு எனத் தொல்காப்பியனுராற் குறிக்கப் பெற்ற தமிழ் வேத்தர் மூவருள்ளும் சோழரது அரசியல் முறை சிறந்து விளங்கிய திறத்தினை,

மண்டினி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் முரசு முழங்கு தானே மூவருள்ளும் அரசெனப்படுவது நினதே பெரும (புறம் - 35) என வெள்ளேக்குடி நாகனர் சிறப்பித்துள்ளார். தொன்று தொட்டு வரும் இச் சிறப்பினை நினைவு கூர்ந்து புகழ்ச் சோழரைப் போற்றும் முறையில் அமைந்தது,

" முரசங்கொள் கடற்ருனை மூவேந்தர் தங்களின் முன்

பிரசங்கொள் நறுந்தெரியல் புகழ்ச்சோழர் பெருமையினைப் பரசுங்குற் றேவலிகுல் அவர் பாதம் பணிந்தேத்தி "

(பெரிய-புகழ்ச்-41) என வரும் பெரிய புராணத் தொடராகும்.

பருந்துக்கு அஞ்சித் தன்னை அடைக்கலம் புகுந்த புரு வினது வருத்தத்தைப் போக்குதல் வேண்டி அதற்கு