பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1039

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 選○露3

என அம்மன்னனுக்கு அந்திமாலையை உவமையாகக் கூறியுள்ளமை ஒப்பு நோக்கற் பாலதாகும்.

புலியைத் தன்னிடத்தே யுடைய கொடியை யுயர்த்த

! - *& :5 ممهد. ţă

தேரையுடைய உரவோளுகிய சோழனது கொற்றத்

துடனே மழைக்குக் கருப்பத்தைத் தோற்றுவிக்கும் யாகத்

தீயினை வளர்க்கின்ற வேள்விச் சாலையிலே மறையோரால்

உண்டாக்கப்பட்ட தேவர் உணவின் ஆவிகள் எங்கும்

போர்த்தலால் அம்மாடங்கள் மேகந்தவழும் மலைபோலத்

தோன்றும் பெருமை வாய்ந்தன சோழ நாட்டில் மங்கல மறையோர்கள் வாழும் ஊர்கள் என்பதனை,

' உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு

மழைக் கருவுயிர்க்கும் அழற்றிகழ் அட்டில் கறையோர் ஆக்கிய ஆவுதி நறும்புகை இறையுயர் காடம் எங்கணும் போர்த்து மஞ்சு சூழ் மலையின் மானத் தோன்றும் மங்கல மறையோர் இருக்கை (சிலப்-நாடுகாண்-142-148; என வருந் தொடரில் இளங்கோவடிகள் சிறப்பித்துரைக் கின் ருர். இளங்கோவடிகள் வாய்மொழியை அடியொற்றித் தொண்டை நாட்டில் மறையவர் வாழும் செழும்பதிகளைச் சிறப்பிக்கும் முறையில் அமைந்தது.

" தொல்லை நான்மறை முதற்பெருங் கலையொலி துவன்றி

இல்லறம் புரிந்தாகுதி வேள்வியில் எழுந்த மல்குதண் புகை மழைதரு முகிற்குலம் பரப்பும் செல்வ மோங்கில திருமறையவர் செழும் பதிகள் '

(பெரிய-திருக்குறிப்பு - 29)

என வரும் பெரிய புராணச் செய்யுளாகும்.

பாண்டியர்கள் தமிழ் வளர்ச்சி கருதி மூன்று முறை சங்கம் வைத்துத் தமிழாராய்ந்த பெருமையினைக்கருதி அவர்களால் ஆளப்படும் பாண்டி நாட்டினைத் தமிழ் நாடு ' எனச் சிறப்பாக வழங்கும் வழக்கம் இளங்கோவடிகள் காலத்தில் நிலைபெற்றிருந்த தென்பது,

  • தென்றமிழ் நன் நாட்டுத் தீது தீர் மதுரைக்கு

ஒன்றிய வுள்ளம் உடையேன் ஆகலிற் போதுவல் யானும் ” (சிலப்-நாடுகாண் - 58-60)

எனக் கவுந்தியடிகள் கூற்றில் வைத்து அடிகள் கூறுதலால் இனிது புலனும். இப்பெயர் வழக்கினை,