பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

பன்னிரு திருமுறை வரலாறு


துணிதல் முறையாகுமா ? அதுபோலவே விநாயகரைப் பற்றிக் குறிப்பிடாத மாணிக்கவாசகர் விநாயகர் வழிபாடு பரவத் தொடங்கிய கி. பி. ஆரும் நூற்ருண்டிற்கு முற்பட்டவ ரெனத் துணிதலும் முறையாகா தென்க.

(6) திருச்சிற்றம்பலக் கோவையாரில் வங்கமலி கலி

நீர் தில்லை (செ-85) எனவும், கடற்றில்லை (122, 298) எனவும் புலியூர் சுற்றும் போர்க்கடலே (183) எனவும் மணிவாசகப் பெருமான் கூறுதலால் அவர் காலத்தே தில்லை நகரின் அருகே கடல் நின்றதென்றும், “ பாளையுடைக் கமு கோங்கிப் பன்மாட நெருங்கி யெங்கும், வாளையுடைப்புனல் வந்தெறி வாழ்வயற்றில்லை ” எனத் திருநாவுக்கரசரும் " மையாரொண்கண்ணுர் மாடநெடுவீதிக், கையாற் பந்தோச் சுங் கழிசூழ் தில்லை ” எனத் திருஞானசம்பந்தரும் தில்லைநகர அமைப்பைக் கூறுதலால் அவ்விரு பெருமக்களும் வாழ்ந்த காலத்தே கடல் தில்லையை விட்டு ஒருகல் தொலைவில் விலகிச் செல்ல அது நின்றவிடத்தே உப்பங்கழி நீர் நிற்பதா

யிற்றென்றும், இவ்வாறு கடல் விலகிச் செல்லுதற்கு 225

يَين.

ஆண்டுகளாவது சென்றிருக்க வேண்டுமென்றும், எனவே மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் கி பி. நான்காம் நூற்

o می مٹی +++ * . . . . . (T. c. -- 3~ و هي ج ومة. ருண்டுக்கு முற்பட்டதாமென் 'லயடிகள்.

{يمي م : بي: ;يمي ؛ چي ة r: * ארא", "שיא", திருவாதவூரடிகள் வங்ககவி

- எனவும் கடற்றில்லை எனவும் கூறியது. தில்லை நகரத்தையொட்டிக் கடல் அமைந்திருந்தது என்பதைக் குறித்தற் பொருட்டன் ரும். கடலுக்கு ஐந்தாறு கல் தொலைவிலமைந்த ஊர்களே யும் கடற்கரையூராகச் சிறப்பித்துரைக்கும் வழக்கம் இலக்கியங் களிற் பெருகிக் காணப்படுகின்றது. சீகாழிப்பதிக்குக் கிழக்கே ஐந்தாறு கல் தொலைவில் கடலமைந்திருப்பினும்,

" ஒன் ஞர் புரமூன்று மெரித்த வொருவன் மின்னுரிடை யாளொடுங் கூடிய வேடத் தன் னு லுறை வாவது தண்கடல் சூழ்ந்த பொன் ஞர் வயற்பூம் புகலித் நகர் தானே "' எனத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் அதனைக் கடலொடு தொடர்புபடுத்திக் கூறியுள்ளார். அது போலவே தில்லை நகரத்தைச் சிறப்பிக்குத் திருவாதவூரடிகளும் கடலுக்கு மூன்று நான்கு கல் தொலைவிலுள்ள தில்லேயைக் கடல் வளம்

  • முதல் திருமுறை 30-ஆம் பதிகம் 2-ஆம் திருப்பாட்டு,