பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1041

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 16:25

எனக் கண்ணகியாரைக் குறித்தமைந்த இப்பாராட்டு, வண்டமிழ் செய்தவம் நிரம்ப வந்து தோன்றித் திசையனைத் தின் பெருமையெல்லாம் தென்றிசையேவென்றேற அசை வில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்லத் தென்றமிழ் நன்னுட்டில் தெய்வநெறிச் சிவம் பெருக்கிய திருஞானசம்பந்தப்பிள்ளையார்க்கு முற்றிலும் பொருத்த மு.ையதெனக் கொண்ட சேக்கிழாரடிகள்,

தென்தமிழ் நாடுசெய்த செய்தவக்கொழுந்து போல்வார் .

(பெரிய - சம்பந்தர் - 750) என ஆளுடைய பிள்ளையாரைப் பாராட்டிப் போற்றி யுள்ளார்.

மதுரையிலிருந்து வீசும் தென்றலின் சிறப்பினை, * மலயத் தோங்கி மதுரையின் வளர்ந்து புலவர் நாவிற் பொருந்திய தென்றல் '

(சிலப் - புறஞ்சேரி - 25, 26) எனத் தமிழின் தோற்ற வளர்ச்சியுடன் இளங்கோவடிகள் இயைத்துரைத்தமையுணர்ந்த சேக்கிழாரடிகள் அத்தென் றலைத் தமிழ் மாருதம் (பெரிய - தடுத்தாட் - 157) எனத் தமிழுடன் இயைத்துப் போற்றுகின் ருர். ஞானசம்பந்தப் பிள்ளையார் மதுரைக்கு எழுந்தருளியபோது தமிழ்த் தென்றல் பிள்ளை யாரை சதிர்கொண்டு வரவேற்ற திறத்தினை,

செந்தமிழ் மாருதம் எதிர்கொண்டு எம்மருங்குஞ் சேவிப்பு ' (பெரிய - சம்பந்தர் - 649) எனவரும் தொடரிற் சேக்கிழாரடிகள் புனைந்துரைத் துள்ளார்.

சிலப்பதிகாரம் வேட்டு வரியிற் கூறப்படும் சாலினியின் தெய்வக்கோலமும் கண்ணப்ப நாயனர் புராணத்திற் கூறப்படும் தெய்வ நிகழ் குறமுதியாள் கோலமும் ஒப்பு நோக்கியுணரத் தக்கனவாகும்.

பரிசனங்கள் சூழ மலைவளங் காணச் செல்லும் செங்குட்டுவனுக்கு,

வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு

விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன்

பெருமால் களிற்றுப் பெயர்வேசன் போன்று '

(சிலப் - காட்சி - 10, 16)

65