பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1048

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103? பன்னிரு திருமுறை வரலாது

திருத்தொண்டர் புராணச் சிறப்பு

திருத்தொண்டர் புராணமாகிய இக்காப்பியம், தமிழ் நாடு, தமிழ்மொழி, தமிழ் மக்கள் சிறப்பாக மேற்கொண் டொழுகிய சைவ சமயம் ஆகியவற்றின் தொன்மைச் சிறப்பினையும், தமிழகத்திற் கி. பி. இரண்டாம் நூற்ருண்டு முதல் கி. பி. பன்னிரண்டாம் நூற்ருண்டு முடியவுள்ள காலப் பகுதியில் நிகழ்ந்த அரசியலாட்சி முறை மக்களது தெய்வங் கொள்கையொடு தொடர்புடையனவாய் திகழ்ந்த சமுதாய வாழ்க்கை நிகழ்ச்சிகள், எல்லோரும் இன் புற் றிருத்தல் வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோளுடை யராய் நாடும், மொழியும் சமயமும் வளம்பெறத் தொண்டாற்றி வாழ்ந்த திருவரும் செல்வர்களின் வாழ்க்கை நடைமுறைகள் ஆகிய வரலாற்றுண்மைகளையும் தெளிவாக அறிவுறுத்தும் முறையில் அமைந்த வரலாற்றுக் காப்பியம் என்பது முன்னர் விளக்கப்பெற்றது. கசவசமயச் சான்ருேர்களாற் பன்னிரு திருமுறைகள் எனப் போற்றப் பெறும் அருள் நூல்களிற் பன்னிரண் சந் திருமுறையாக அமைந்த இந் நூல், இதற்கு முன் தோன்றிய ஏனைய பதிளுெரு திருமுறைகளின் சொற்பொருள் அமைப்பினே அடியொற்றியதாய், அத்திருமுறைகளின் பொருள் நலங் களை விரித்துரைக்குத் தனிச் சிறப்புடையதாகத் திகழ் கின்றது.

தில்லையம்பலவர் திருவருளால் உலகெலாம் எனத் தோன்றிய அருள் மொழியினை முதலாகக் கொண்டு,

  • உலகெலா முணர்ந் தோதற் கரியவன்

நிலவு லாவிய நீர் மலி வேளிையன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். '

என அருள்மொழித் தேவராகிய ஆசிரியர் இந்நூலைத் தொடங்கியுள்ளார் என்பது வரலாறு. ஆகி.பகவன் முதற்றே உலகு எனத் திருவள்ளுவரும், உலகம் உவப்ப என நக்கீரரும் உலகம் என்பதனை முதலாகக் கொண்டு தம் நூலைத் தொடங்கியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும். ' உயிர்கள் எல்லாவற்ருலும் மனத்தால் உணர்தற்கும் வாய்மொழிகளால் ஒதுதற்கும் அரியவனும், பிறைச் சந்திரன் உலவுதற்கு இடமாய்க்