பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் இi.

உடைய பதியாகக் குறிப்பிட்டுள்ளார். இங்ங்ணம் மணி வாசகப் பெருமான் தில்லையைக் கடலொடு தொடர்புபடுத்திக் கூறிற்ைபோலவே கி.பி 10, 11-ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த திருவிசைப்பா ஆசிரியர்களாகிய கருவூர்த் தேவரும் திரு வாலி யமுதஞரும் " ஆர்த்துவந் தமசித் தமரரும் பிறரும் அலைகட லிடுதிரைப் புனிதத் தீர்த்த நீரரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே" எனவும் "சீர்வங்கம் வந்தனவும் தில்லைமா நகர்ச் சிற்றம்பலம்" எனவும் முறையே கடலின் பாங்கர் அமைந்த ஊராகத் தில்லைப் பதியைக் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே மாணிக்கவாசகர் காலத்தில் மட்டுமன்றித் திருவிசைப்பா ஆசிரியர்களாகிய கருவூர்த்தேவர், திருவாலிய முதர் முதலியோர் வாழ்ந்த

பிற்காலத்திலும் தில்லைப்பதி கடலொடு தொடர்புடையதாக

வைத்துப் பாடப்பெற்றதென்பது நன்கு புலனுகின்றது.

རེ་༤உண்மையாக நோக்குமிடத்துத் தேவார ஆசிரியர்

காலத்தில் மட்டுமன்றி மாணிக்கவாசகர் வாழ்ந்த நாளிலும் சிதம்பரத்தையொட்டிக் கடல் இருந்ததில்லையென்பதும், கடலொடு தொடர்புடைய உப்பங்கழியே தில்லைநகரின் கீழ்த் திசையில் அமைந்திருந்ததென்பதும், தில்லையின் ஏனைய

வளைந்தோடியதென்பதும், அந்நீரால் வளம்பெற்ற தில்லை நகரின் சுற்றுப்புறம் வயலும் சோலேயுமுடைய மருத நிலமாய்த் திகழ்ந்ததென்பதும்,

" மாதுற்றமேனி வரையுற்ற வில்லிதில்லை நகர் சூழ்

போதுற்ற பூம்பொழில் கான் கழிகாள் ”ே

" பொன்னிவளைத்த புனல் சூழ்நிலவிப் பொலிபு. யூர் 4 * சிறைவான் புனற் றில்லைச்சிற்றம்பலம் .

' குருநாண்மலர்ப் பொழில் சூழ்தில்லை 'ே எனவரும் சிற்றம்பலக்கோவைத் தொடர்களாலும்,

கருவூர்த்தேவர் திருவிசைப்பா. கோயில் - 8.

. திருவாலியமுதர் திருவிசையப்பா. கோயில் கோலமலர்-8.

திருச்சிற்றம்பலக்கோவை 174-ஆம் செய்:புள் . திரு - o

%.

திருச்சிற்றம்பலக்கோவை 817-ஆம் செய்யுள்

திருச்சிற்றம்பலக் கோவை 20-ம் செய்யுள் .

&

திருச்சிற்றம்பலக் கோவை 44-ம் செய்யுள்.

..