பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1059

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 莒翰磐

களைச் செய்த உயிர்களே நுகரும்படி நியமித்து நுகரச் செய்பவனுகிய இறைவனும் எனச் சைவசமயச் சான்ருேச் களால் ஆராய்ந்து நிச்சயிக்கப்பட்ட பொருள்கள் நான் காகும். இவ்வுண்மையினை,

செய்வினையுஞ் செய்வானும் அதன்பயனுங் கொடுப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்தபொருள் எனக்கொண்டே இவ்வியல்பு சைவநெறி யல்லவற்றுக் கில்லையென உய்வகையாற் பொருள் சிவனென் றருளாலே

உணர்ந்தறிந்தார்’ (பெரிய - சாக்கிய - 5) எனச் சாக்கிய நாயனர் இறைவனருளால் உணர்ந்ததாகச் சேக்கிழார் அறிவுறுத்தியுள் ளார். அருண்மொழித்தேவர் சைவ சமயத்தின் துணிபொருளாக அறிவுறுத்திய இப் பொருள் வகையினை,

செய்வானுஞ் செய்வினையுஞ் சேர் பயனுஞ் சேர்ப்பானும் உய்வா னுள னென் றுணர் ' (திருவருட்பயன் - 33) என உமாபதி சிவாசாரியார் எடுத்தாண்டுள்ளமை மனங் கொளத்தகுவதாகும். இதன்கண் செய்வான் என்றது இருவினைகளைச் செய்துழல்வாளுகிய புருடனை செய்வினை , உயிர்களாற் செய்யப்படும் நன்றும் தீதும் ஆகிய வினைகள். சேர்பயன் - தாம் செய்த நல்வினை தீவினைகள் காரணமாக உயிர்களைச் சேர் தற்குரிய இன்ப துன்பங்களாகிய நுகர்ச்சிகள். சேர்ப்பவன், உயிர்கள் செய்த இருவினைப் பயன்களைச் செய்த உயிர்களே நுகர்ந்து கழிக்கும்படி நிய மித்து நுகரச் செய்பவனுகிய இறைவன். தாம் செய்த நல் வினை தீவினைகளின் பயனைத் தாமே அறிந்து எடுத்துக் கொண்டு நுகரும் உணர்வுவன்மையும் வினைப்பயன் களாகிய இன்பதுன்பங்களில் விருப்பு வெறுப்பற்ற தன்மை யும் உயிர்களுக்கு இல்லை. செய்த வினைப்பயன்களைச் செய்த உயிர்களே நுகரும்படி சென்று சேரும் உணர்வு வினைக்கு இல்லை. எனவே உயிர்கள் செய்த வினைப்பயன் களை அவ்வுயிர்களே நுகர்ந்து கழிக்குமாறு வரையறுத்து நுகர்விப்பவன் இறைவன் ஒருவனே என்பது சைவ சமயச் சான்ருேர் துணியாகும்.

உயிர்களுக்கு உலகு உடல் கருவி நுகர்பொருள்களைப் படைத்தளிப்பவன் இறைவன் ஆதலால் அவனே எல்லாப் பொருள்களையும் தனக்கு உடைமையாகக் கொண்ட உடை யான் என்றும், உலகப் பொருள்கள் யாவும் அவனது