பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1061

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 擂盛等

இருவினையொப்பு உடையஞய் இறைவனையறியும் தன்மை யினைப் பெற்ருன் என்பதனை,

தென்னவன் மாறன்தானுஞ் சிரபுரத்தலைவர் தீண்டிப் பொன்னவில் கொன்றையார் தந் திருநீறுபூசப்பெற்று முன்னே வல்வினையும் நீங்கி முதல்வனை யறியுந்தன்மை துன்னிஞன் வினைகள் ஒத்துத் துலையென நிற்றலாலே "

(பெரிய - சம்பந்தர் - 819) எனவரும் பாடலில் ஆசிரியர் தெளிவாக விளக்கி யுள்ளார்.

மலபரிபாகம் வருமளவும் மலத்திற்கு அநுகூலமாய் நின்று நடத்திய இறைவனது திரோதானசத்தி, மலம் பரிபாகம் எய்திய நிலையில் கருனைமறமாகிய செய்கை மாறிக் கருணை யெனப்படும் முன்னைப் பராசத்தி ரூபமாய் உயிர்கள்மாட்டுப் பதிதலே சத்திநியாதம் எனப்படும். இறைவனது அருட்சத்தி பக்குவமுடைய உயிர்கள்பாற் பதிதலால் அவ்வுயிர்கள் பாசத் தொடர்பினின்றும் விலகி இறைவன் திருவருளில் தோய்வன. இவ்வுண்மையினை,

திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றவர்காணுமுன்னே அங்கணர் கருனை கூர்ந்த அருள்திரு நோக்கம் எய்தத் தங்கிய பவத்தின் முன்னேச் சார்புவிட்டகல நீங்கிப் பொங்கிய ஒளியிரீைழல் பெருவிலன்புருவமாளுர்

(பெரிய - கண்ணப்பர் ~ 104)

எனவும்,

அந்நிலையில் திருத்தோணிவிற்றிருந்தார் அருள் நோக்கால் முன்னிலைமைத் திருத்தொண்டு முன்னியவர்க்கருள்புரிவான் பொன்மலை வல்லியுந்தாமும் பொருவிடைமேல் எழுந்தருளிச் சென்னியிளம் பிறை திகழச் செழும்பொய்கை

மகுங்கனைந்தார் (பெரிய - சம்பந்தர் - 54) எனவும் வரும் திருப்பாடல்களில் ஆசிரியர் புலப்படுத்தி புள்ளார்.

தாள் + தலை என்னும் இவ்விரு சொற்களும் புணருங் கால் நிலைமொழியீற்றில் நின்ற ளகரமும் வருமொழி முதலில் வந்த தகரமும் தம்மிற் பிரித்தறிய வொண்ணுத வாறு டகரமாகிய ஓரெழுத்தாக ஒன்றுபட்டு நிற்கும். அது போல, ஆன்மாவும் சிவமும் அவை எனவும் தான் எனவும் வேறு பிரித்து உணர வொண்ணுதவாறு அவையே தானே யாய்ப் பிரிவற ஒன்ருகிய நிலையில் ஆன்மாவின்கண்