பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1062

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}áč பன்னிரு திருமுறை வரலாது

நிகழ்வதே சிவாநுபவம் இதனை அறிவுறுத்தும் முறையில் அமைந்தது,

தாடலைபோற் கூடியவை தானிகழா வேற்றின்பக் கூடலைநீ ஏகமெனக் கொள் (74) எனவரும் திருவருட் பயனுகும். இவ்விளக்கம்,

தங்கள் பெருமான் அடிநீழல் தலையாம் நிலைமை சார்வுற்ருர் . (பெரிய-முருக-13) எனவரும் சேக்கிழார் வாக்கினை அடியொற்றி அமைந் திருத்தல் அறியத் தகுவதாகும்.

ஆன்மா சிவத்தோடும் கூடும் நிலையில் ஒன்ருகி என்ற பொருள் கெட்டழிவதுமில்லை : இரண்டாகிப் பிரிவதும் இல்லை ; இரண்டற்ற நிலையில் அத்துவிதமாய் நின்று அநுபவிக்கும் என்பதனை,

ஒன்ருலும் ஒன்ரு திரண்டாலும் ஓசையெழா தென்ருலொன் றன்றிரண்டும் இல் ' (75) என வரும் திருவருட் பயனில் உமாபதிசிவம் இனிது விளக்கியுள்ளார். சைவசித்தாந்த முத்திநிலை பற்றிய இவ்விளக்கம்,

தண்ணரிய சிவானந்த ஞான வடி வேயாகி அண்ண லார் சேவடிக்கீழ் ஆண்டவர சமர்ந்திருத்தார் .

(பெரிய-திருதச வுக்-427) எனவும்,

காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலங் கொண்டருளித் தீத கற்ற வந்தருளுந் திருஞான சம்பந்தர் நாதனெழில் வளர்சோதி நண்ணியதனுட் புகுவார் போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி யுடனுஞர் '

(பெரிய-சம்பந்தர்-1233) எனவும் அருண்மொழித் தேவர் கூறிய வீடுபேற்றியல்பினே விளக்கும் முறையில் அமைந்திருத்தல் காணலாம்.

இங்ங்னம் திருத்தொண்டர் புராணத்தில் சைவ சித்தாந்த நுண்பொருள்கள் பலவற்றை இனிது விளக்கிச் செல்லும் சேக்கிழாரடிகள், சமணம் பெளத்தம் ஆகிய புறச் சமயங்களின் கொள்கைகளையும் ஆங்காங்கே எடுத்துக் காட்டி அவை மக்கள் வாழ்வுக்கு உறுதியற்றன வாதலே விளக்கியுள்ளார். வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சுத்