பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1063

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் is 47

தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனுகிய இறைவனை மறந்து தெய்வமுண்டென்னுந் தெளிவின்றி அற முதலிய வற்றை மட்டும் வற்புறுத்தும் புறச்சமயங்கள், உயிர்க் குயிராகிய முதல்வன் எல்லையற்ற பேரருளால் உயிர் களுக்குச் செய்துவரும் பேருதவியை மறந்தன ஆதலால், சமண முதலிய புறச்சமயங்களை நன்றியில்லாத சமயம்’ என ஆசிரியர் குறித்திருப்பது அறிஞர்களால் ஊன்றி நோக்கத் தக்கதாகும்.

நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்

(பெரிய-சம்பந்தர்-659)

என்புழிச் சமண சமயம் நன்றியில் நெறி எனக் குறிக்கப்பெற்றிருத்தல் காணலாம். ஆளுடைய பிள்ளையார் அடியார் திருக்கூட்டத்துடன் திருத்தெளிச் சேரியினை அடைந்தபொழுது பின்ளேயார்பால் அன்புடைய அடியார் களில் ஒருவர் சாரிபுத்தனுடன் சமயவாதம் நிகழ்த்திய செய்தியினைக் கூறுமிடத்துப் புத்தர் கூறும் கணபங்க வாதத்தை விரிவாக எடுத்துக் காட்டி மறுத்திருப்பது கொண்டு சேக்கிழாரடிகளது தத்துவநூற் புலமையினை நன்குணரலாம்.

வடுகக் கருதாடர் மன்னன் பாண்டிய நாட்டைக் கைப் பற்றியதும், பரஞ்சோதியார் பல்லவ வேந்தனது சேனைத் தலைவராய் வடநாட்டின் மேற் படையெடுத்துச் சென்று வாதாவி நகரத்தை யழித்து மீண்டமையும், நின்றசீர் நெடுமாறன் நெல்வேலிப் போர்க்களத்தில் பகைவரை வென்றதும், பிற்காலச் சோழ மன்னர்கள் வடநாட்டிற் சென்று சயத்தம்பம் நாட்டியதும் முதலிய தமிழக வரலாற்றுச் செய்திகளை ஆசிரியர் தம் நூலில் ஆங்காங்கே குறித்திருப்பதும், திருத்தொண்டத் தொகையடியார்களின் வரலாறு கூறும் நிலையில் தம் காலத்திற்கு முன்னுள்ள இலக்கியச் சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் துணையாகக்கொண்டு உண்மைச் செய்திகளை ஆராய்ந்து கூறியிருப்பதும் ஆசிரியரது வரலாற்றுப் புலமைக்குச் சிறந்த சான்றுகளாகும்.

தேவ ர ஆசிரியர்கள் மூவரும் தலங்கள் தோறும் சென்று இறைவனை வழிபட்டுத் திருப்பதிகப் பாமாலை பாடி வழிபட்ட செய்தியினை விரித்துரைக்கும் நிலையில்