பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1064

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1048

பன்னிரு திருமுறை வரலாறு


அவர்கள் சென்ற வழியின் அமைப்பு அடுத்தடுத்துள்ள திருத்தலங்கள், அவற்றை யடுத்தமைந்த ஆறுகள் தல புராணக் குறிப்புக்கள் முதலியனவற்றைக் கற்போர் தெளிவாக அறிந்துகொள்ளும் முறையில் விரித்துக் கூறியிருப்பதுகொண்டு குமரி முதல் இமயம் வரையுள்ள நம் நாட்டின் அமைப்பினை உள்ளவாறுனர்ந்த அவரது நிலநூற் பயிற்சியினை நன்குணரலாம்.

இந்நூலில் ஆளுயர் குழலோசையின் இசை அமைப் பினையும், திருநீலகண்ட யாழ்ப்பாணரது யாழ் வாசிப் பினையும் தேவாரத் திருப்பதிகங்களில் அமைந்த பண்கள் தாளங்கள் ஆகிய இசை நலங்களையும் விரித்துரைக்கும் பகுதிகள் சேக்கிழாது இயலிசைப் புலமைக்குச் சான் ருக அமைந்துள்ளன. தேவாசத் திருப்பதிகங்கள் பாடப் பெற்ற செவ்வியினைப் புலப்படுத்தும் நிலையில் அத்திருப் பதிகச் சந்தங்களிலே செய்யுட்களை அமைத்திருத்தலையும், நாடக அமைப்புக்கேற்ற உரையாடல்கள் இக்காப்பியத்தில் ஆங்காங்கே இடம் பெற்றிருத்தலையும் கூர்ந்து நோக்கு வோர் இத்திருத்தொண்டர் புராணம் முத்தமிழ்க் காப்பிய மாகிய சிலப்பதிகாரத்தைப் போன்று அமைந்த இயலிசை நாடகப் பொருட்டொடர் நிலை என்பதனை நன்குனர்வர்.

புலன்கொளுவ மனமுகிழ்த்த சுருள் நீக்கி மலர்விக்கும்

கலைபயிலத் தொடங்குவித்தார் (பெரிய-திருதாவுக்-20)

எனக் கல்விப் பயிற்சியின் இயல்பினையும்,

சிந்தைமலர்ந்தெழும் உணர்வின் செழுங்க&யின்

திறங்களெலாம் ' { ... , 21}

என அப்பயிற்சியினுல் உளவாம் கலைத் திறங்களே யும் உறுப்பு நூல், மருத்து நூல், கட்டிடக்கல் முதலிய வற்றையும் இந்நூலில் ஆங்காங்கே ஆசிரியர் குறித்துச் செல்லும் குறிப்புகள் அவரது பல்கலைத் திறத்திற்குச் சிறந்த சான்ருகத் திகழ்கின்றன.

திருத்தொண்டர் புராணத்தின் செய்யுள் தொகை 4253 எனச் சேக்கிழார் புராணம் கூறும். இப்பொழுது 4286 செய்யுட்கள் இந்நூலில் உள்ளன. எனவே 33 பாடல்கள் இடைச்செருகலாகப் பின்வந்தோராற் பாடிச் சேர்க்கப் o o f £# »** * »3-»* & يكم. شو من ميا عش பெற்றன எனக் கருதவேண்டியுளது. திருமலைச் சருக்கத்தில்