பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1066

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1050

பன்னிரு திருமுறை வரலாறு


துருத்தியில் திருநாவுக்கரசர் திருமடம், திருமருகல், திரு வாருர், திருவீழிமிழலை, திருமறைக்காடு, காஞ்சி, காளத்தி, மதுரை, நல்லூர்ப்பெருமனம் முதலிய தலங்களில் அமைந்த திருமடங்கள் ஆகியவற்றைப் பற்றிக் கூறும் குறிப்புக்கள் அக்காலத்தில் திருமடங்களில் தங்கியிருந்து சிவநெறி வளர்த்த திருத்தொண்டர்களின் சைவ சமயத் திருத்தொண்டுகளைப் புலப்படுத்துவனவாகும். சீகாழி, தில்லை. திருவீழிமிழலை, திருவாக்கூர், திருக்கடவூர் முதலிய தலங்களில் வாழும் அந்தணர்களைப் பற்றி ஆசிரியர் கூறும் குறிப்புக்கள் அக்காலத்தில் வேதநெறி தழைத் தோங்க விளங்கிய சீலமுடைய வேதியர்களின் ஒழுக லாற்றினை நன்கு விளக்குவனவாகும்.

நம்பியாரூரரை வலிய ஆட்கொள்ள வந்த கிழவேதியர் கோலம் பற்றியும் அமர்நீதி நாயஞர்க்கு அருள் புரிய வந்த மறைக்குலத்துப் பிரமசசரியின் வடிவு பற்றியும், திருநீல கண்டக் குயவர்.பால் எழுந்தருளிய சிவயோகியார் வடிவு பற்றியும், மானக்கஞ்சாறர் பால் வந்த மனவிரத முனிவர் கோலம் பற்றியும், சிறுத்தொண்டர் பால் எழுந்தருளிய பயிரவ சமய அடியார் கோலம் பற்றியும் சேக்கிழார் சொல் லோவியஞ் செய்து காட்டிய பகுதிகள் அக்காலத்து வாழ்ந்த அகச்சமய அடிiார்களின் திருக்கோலப் பொலி வினைக் கற்போர் உளக்கண்ணின் முன் நிறுத்தும் கற்பனைத் திறம் மிக்கன ஆகும்.

தூயவெண்ணிறு துதைந்த பொன்மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவருசிந்தையும் நைந்துருகிப் பாய்வது போலன்பு நீர் பொழிகண்ணும் பதி கச்செஞ்சொல் மேயசெவ்வாயும் உடையார் புகுந்தனர் விதியுள்ளே

(பெரிய திருநாவுக் 148) எனத் திருநாவுக்கரசரது திருவேடிப் பொலிவினை விளக்கிய சேக்கிழார், அப்பெருந்தகையாரது அருள் வேடத்தைக் கண்ட ஆளுடைய பிள்ளையார் தம் நெஞ்சக் கிழியிலே வரைந்து நெடுங்காலமாக வழிபடப்பெற்று வந்த அடியார் திருவேடமே இப்பொழுது திருநாவுக்கரசராகப் புறத்தே உருப்பெற்று எதிரே எழுந்தருளியது என எண்ணி அப்பர் திருவேடத்தினைத் தொழுது மகிழ்ந்த செய்தியினை,

" சிந்தையிடையரு அன்புத் திருமேனி தனிலசைவும் கந்தைமிகையாங் கருத்தும் கையுழ வ: ரப்படையும்