பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1073

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

அத்திருக்கோயில் இக்காலத்தில் தன் சிறப்பனைத்தும் இழந்து பழுதடைந்து அழிவுற்ற நிலையில் உளது. எனினும் இத்திருக்கோயிலிலுள்ள கருப்ப இல்லின் புறச் சுவரின் திருத்தொண்டத் தொகை அடியார்களின் வரலாறு களைப் புலப்படுத்தும் முறையில் அமைக்கப் பெற்றுள்ள சிவனடியார் சிற்பங்களும், திருச்சுற்று மாளிகையிலும் இராச கெம்பீரன் திருமண்டபத்திலும் அமைந்த அழகிய சிற்பங்களும் இன்றும் அத்திருக்கோயிலின் பழைய பெருமைகளை அறிவுறுத்திக்கொண்டு அதனை அமைத்த இராசராச சே ழனுடைய புகழ்த்திறங்களாக நிலை பெற்றுள்ளன.

வரலாற்றுச் சிறப்புடைய இத்திருக்கோயில் விமானத் தின் புறச் சுவரில் அடித்தளத்தின் மேலும் மாடப்புரை களின் கீழும் ஆக ஆறங்குல உயரம் அமைந்துள்ள அடிப் பக்கத்துப் பட்டியலாகிய நடுப்பத்தியில் தென்கிழக்கு முனையிலிருந்து வடகிழக்கு முனை முடியத் திருத்தொண்டத் தொகை அடியார்களின் வரலாறுகள் கருங்கல்லிற் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப் பெற்றுள்ளன. இச் சிற்ப வரிசைக்குமேல் மரச்சட்டம் போன்று அமைந்த கற்பத்தியில் இவற்றுக்குரிய அடியார்களின் பெயரொடு தொடர்ந்த குறிப்புக்கள் தமிழ் எழுத்திற் பொறிக்கப் பெற்றுள்ளன. இச் சிற்பங்களின் இடையே யமைந்த மூலை முடுக்குகளாகிய இடை வெளிகளில் அழகுக்கெனச் செதுக்கப்பெற்ற பூவேலைப்பாடுகளுடன் கூடிய வேறு சில சிற்பங்களும் தெய்வத் திருவுருவங்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன.

தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” எனத் திருத்தொண்டத் தொகையில் அடியார்கள் போற்றப் பெற்றுள்ள முறையினை அடியொற்றித் தில்லைவாழந்தனர் என்னும் தொகையடியார் முதலாக, அன்னவனும் ஆரூரன் எனக் குறிக்கப்பட்ட நம்பியாரூரர் ஆகிய தனியடியார் ஈருக வமைந்த நாயன்மார்களுக்குரிய சிற்பங்கள் இவ் விமானத் தின் தென் கீழ் மூலை தொடங்கி வடகீழ் மூலை முடியத் தொடர்ச்சியாக அமைக்கப்பெற்றுள்ளன. நம்பியாரூரர் அருளிய திருத்தொண்டத் தொகையின் பெயர் முறையினை ஒட்டியமைந்த இச் சிற்பங்களின் வரிசையில் அரிவாட்டாய

6?