பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1074

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

நாயனரைக் குறித்த சிற்பம் ஒன்று மட்டும் உருத்தெரியாத வாறு சிதைந்துள்ளது. திருநாவுக்கரசரைக் குறித்த சிற்பத்துள் ஒரு பகுதி சிதைய ஒரு பகுதி மட்டுமே சிதை யாமல் எஞ்சியுள்ளது. இவற்றுள் ஐம்பது சிற்பங்களுக் குரிய கல்வெட்டுக் குறிப்புக்கள் கட்டும் அழியாதுள்ளன. ஏனையவற்றின் எழுத்துக்கள் சிதைவுற்றமையால் அக் குறிப்புக்கள் இவை யென்று தெளிவாக அறிதற்கு இயல வில்லை. இவ்வாறு கல்வெட்டுக் குறிப்புக்க சிதைந்து மறைந்தாலும் திருத்தொண்டத் தொகையின் வரிசை முறையினை உளங்கொண்டு இச்சிற்பங்களே நோக்குங்கால் இவை இன்ன இன்ன நாயன்மார்க்குரிய சிற்பங்களாகும் எனத் திட்டமாகத் தெரிந்து கொள்ளுதற்குரிய அடையா ளங்கள் இச் சிற்பங்களில் தெளிவாகப் புலளுதல் காணலாம்.

மேற்குறித்த சிற்பங்களில் அவற்றின் மேற் பொறிக்கப் பெற்றுள்ள கல்வெட்டுக் குறிப்புக்களைக்கொண்டு இது இன்ன நாயனுரைக் குறித்தது எனத் தெளிவாகக் கூறுதற் குரிய ஐம்பது சிற்பங்களை மட்டும் தென்னிந்தியக் கல் வெட்டுத் துறையினர் வரி ஓவியம் (Line Block) ஆக வரை நது அவற்றுக்குரிய கல்வெட்டுக் குறிப்புக்களுடன் 1920-ஆண்டின் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்கள். அறிஞர் பிலியோசா jean Filliozat அவர்கள் தலைமையிற் புதுவை மாநிலத்திற் கலேப்பணி புரியும் பித சூசிந்தியக் கலைக் கழகத்தார், இராசராசபுசத்து இாசராசேச்சாத் திருக்கோயிலில் உள்ள இச் சிற்பங்களைச் சிறந்த முறையில் நிழற்படம் எடுத்துள்ளனர். அவர்கள் எடுத்த திழற்படங்கள் அவர்களது இசைவுபெற்று அண்ணுமலைப் பல்கலைக் கழகத் தாரால் அச்சுப் படங்களாக்கப் பெற்றுத் திருத்தொண்டத் தொகை வரிசையில் இந்நூலில் முதன் முதலாக வெளி யிடப் பெற்றுள்ளன.

இச் சிற்பங்களுக்குரிய கல்வெட்டுக் குறிப்புக்கள் பல சிதைவுற்றழிந்த நிலையில், இச் சிற்பங்களிற் குறிக்கப்பட்ட வரலாற்றுச் செய்திகள் இவை யெனத் துணிதற்கு இச் சிற்பங்களை நேரிற் கண்டு அறிதல் இன்றியமையாத நோக்கத்துடன் இராசராசபுத் திருக் சென்று அங்குள்ள இந்தச் சிற்பங்களின்