பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

4.

பன்னிரு திருமுறை வரலாறு

(1) சைவ சமய குரவர் நால்வருள் மாணிக்க வாசக சுவாமிகளை நான்காமவராக வைத்துப் போற்றும் முறை உலக வழக்கும் செய்யுள் வழக்குமாகிய இருவகை வழக்கி லும் நிலைபெற்று வருகின்றது. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என உலக வழக்கில் வழங்கும் இம்முறை வைப்பு, சைவ சமய ஆசிரியராகிய அந்நால்வரும் ஒருவர் பின் ஒருவராக இவ்வுலகில் திருவவதாரஞ் செய்த கால அடைவினை யொட்டியது. திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என நூல்களில் வழங்கும் வைப்புமுறை, அவ்வருளாசிரியர் நால்வரும் ஒருவர்பின் ஒருவராகச் சிவபெருமான் திருவடி நீழலிற் கலந்து இன் புற்ற கால அடைவினை யொட்டி யமைந்ததாகும். மேற் காட்டிய திருவவதார அடைவு, திருவடியடைவு என்னும் இரண்டனுள், திருவடியடைவு பெற்ற கால முறையினை யொட்டியே தேவாரத் திருப்பதிகங்கள் முதலேழு திருமுறை களாகவும், திருவாசகம் திருச்சிற்றம்பலக்கோவை யென்பன எட்டாந் திருமுறையாகவும் வகைப்படுத்தப்பெற்றன.

பட்டினத்தடிகள் பாடிய திருவிடைமருதுர் மும்மணிக்

கோவையில்,

“ வித் தகப் பாடல் முத்திறத்தடியரும்

திருந்திய அன்பிற் பெருந்துறைப்பிள்ளையும் ”

எனச் சைவ சமய குரவர் நால்வரையும் முறையே குறிப் பிட்டுப் போற்றியுள்ளார். இவ்வாறே சைவ நூல்களெல் லாவற்றிலும் திருவாதவூரடிகளைச் சமய குரவருள் நாலாமவ ராக வைத்துப் போற்றும முறையினைக் காணலாம். எனவே தேவார ஆசிரியர் மூவர்க்குப்பின் திருவாதவூரடிகளை நாலா மவராக வைத்துப் போற்றும் இம் முறைவைப்பு சமய குரவர் நால்வரும் வாழ்ந்த கால அடைவினை யொட்டி ஏற்பட்ட தென்பது நன்கு துணியப்படும். இதனுல் தேவார ஆசிரி யர்களாகிய மூவர் முதலிகள் காலத்திற்குப் பின்னும் பதி னுெராந் திருமுறை யாசிரியர்களுள் ஒருவராகிய பட்டினத் தடிகள் காலத்திற்கு முன்னும் அமைந்த காலப் பகுதியே திருவாதவூரடிகள் வாழ்ந்த காலமென்பது தெளிவாகப் புல ளுதல் காணலாம.

(2) நம்பியாரூரர் தம் காலத்தில் வாழ்ந்த சிவனடியார் களையும் தமக்குக் காலத்தால் முற்பட்ட சிவனடியார்களையும் போற்றுங் கருத்துடன் திருத்தொண்டத் தொகைத் திருப்