பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1084

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

களுக்குப் பின்புறமாக எழுந்து நிற்கும் முறையில் உள்ள திருவுருவமே விறன்மிண்ட நாயனுரைக் குறிப்பு தாகும்.

7. அமர்நீதி நாயனர் :

அமர்நீதியார், பிரமசாரியாக வந்த இறைவர் பணித்த வண்ணம் அவரது கோவணத்தினைத் துலையின் (தராசின்) ஒரு தட்டில் வைத்து அதன் மற்ருெரு தட்டிலே தம்பாலுள்ள பொன்ளுெடு நவமணித்திரள் முதலிய பல வகைப் பொருள்களையும் வைத்திடவும் கோவணத் தட்டு நேர் நில்லாது தாழ்ந்தமையால் இறைவரது இசைவு பெற்று மனைவியும் தாமும் அத்துலையினை வலங்கொண்டு ஏறியமர்ந்த நிலையில் துலேயின் இரண்டு தட்டுகளும் ஒத்து நேர் நிற்றலும், நல்லூர் இறைவன் அம்மையப்பராக விடையின்மேல் தோன்றி அருள்புரிதலும்.

தராசின் வலப்பக்க முள்ள தட்டில் பொன் முதலிய பொருள்களுடன் அமர்நீதியாரும் அவர் மனைவியாரும் அவ்விருவர்க்கும் நடுவே ஒரு குழந்தையும் இருத்தலும், இடப்பக்கமுள்ள தட்டிலே இறைவரது கோவணம் ஒன்று மட்டுமிருத்தலும், அத்தட்டின் அருகே மறைக்குலத்துப் பிரமசாரியின் உருவில் இடக்கையிற் கோலுடன் இறைவன் நிற்கும் கோலமும், அதனையடுத்து மாதொருபாகராகிய இறைவர் விடைமேல் தோன்றியருளிய கோலமும் இச் சிற்பத்தில் நன்கு புலனுதல் காணலாம்.

8. எறிபத்த நாயனர் :

வலமிருந்து இடம் : தம் கையிலுள்ள தண்டில் தொங்கிய பூக்குடலையை யானை பறித்துச் சிதறினமையால் செயலற்று வருந்திய சிவகாமியாண்டார் தம் இரு கைகளையும் உயரத் தூக்கிச் சிவதா, சிவதா என முறையிடுதலும், அதனை யறிந்து வெகுண்ட எறிபத்தச் வலக் கையிலுள்ள மழுப்படையினல் யானையையும் பாகர் களையும் துணித்தற்கு முற்படுதலும்.

(8) A. எறிபத்தரால் கை துணிக்கப்பட்ட யானை யும் அதன்மேல் உள்ள பாகர் இருவரும் மழுவினல் வெட்டுண்டு இறந்து கிடத்தலும் அயலே மழுப்படையுடன்