பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1089

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

${}

11. குங்குலியக் கலய நாயனர் :

திருப்பனந்தாள் தாடகை வீச்சரத்திலுள்ள சிவலிங்கத் திருமேனியின் சாய்வு நீங்க வேந்தன் யானைகளைப் பூட்டி யிழுக்கவும் நிமிர்ந்து நேர்பட நி ையில் இளைப்புற்றமை யறிந்து வருந்திய குங்குலியக் கலயனுர், யானும் இவ் விளைப்புற்று எய்க்கும் இதுபெற வேண்டும் என்று சிவ லிங்கத் திருமேனியொடு பொருந்திய கச்சினைத் தம் கழுத் திற்பூட்டியிழுத்துச் சிவலிங்கத் திருமேனியை நிமிர்த்தல்.

12. மனக்கஞ்சா நாயனர் :

தம் மகனை ஏயர்கோன் கலிக்காமர்க்குத் திருமணஞ் செய்து கொடுப்பதாக இசைந்து திருமணம் நிகழ இருக்கும் நாளில், இறைவன் மாவிரத முனிவர் வடிவில் அங்கு வந்து, தம்மை வணங்கிய மணமகள் கூந்தலை நோக்கி வியந்து இது பஞ்சவடிக்கு ஆகும் என, அது கேட்ட மானக் கஞ்சா றர் தம் மகளது கூந்தலை அரிதல். இச் சிற்பத்தில் இடமிருந்து வலம் : மகளது கூந்தகை யரியும் நிலையில் மானக்கஞ்சாறனரது திருவுருவமும், அவர்க்கு எதிரே அதனைப் பெறுதற் பொருட்டு இரு கைகளையும் ஏந்திய நிலையில் மாவிரத முனிவர் திருவுருவமும், நடுவில் இறைவன் அம்மையப்பராக விடைமேல் தோன்றி அருள் புரியும் திருக்கோலமும் இடம் பெற்றிருத்தல் காணலாம்.

13. அரிவாட்டாய யஞர் :

இறைவனுக்கு அமுதாகத் தாம் கொண்டு சென்ற செந்நெற் போனகமும் மாவடுவும் கமரிற்புகத் தளர்ந்து வீழ்ந்த அரிவாட் டாலர் தமது ஊட்டியினை அரியும் நிலையில் அமைந்த சிற்பம் உருத்தெரியாது சிதைந்துள்ளமையால் படமாக எடுக்கப்பெறவில்லை.

14. ஆளுய சாயஞர் :

இச்சிற்பத்தின் நடுவில் வேய்ங்குழலிசைக்கும் ஆணுய நாயனரும், அவரது குழலிசையில் உருகிய நிலையில் பறவை முதலியனவும் அவர் வலப்பக்கத்தில் படமெடுத் தாடும் பாம்பும் அவரது இசையிற் கட்டுப்பட்டு நிற்றலும்,